இளம் திறமையாளர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது டில்லி பாபுவின் ஆக்சஸ் பிலிம் நிறுவனம்

சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் பல இளம்  திறமையாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருப்பது  டில்லி பாபுவின் ஆக்சஸ் பிலிம் நிறுவனம். லாபத்தை மட்டும் பார்க்காமல், திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட  இளம் தயாரிப்பாளரான டில்லி பாபு என்று  சொல்லலாம்.. தங்கள் நிறுவனத்தின் முதல் வெற்றி படமான உறுமீன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர்கள் தயாரிக்கும் இந்த பெயர் சூட்டப்படாத திரில்லர் திரைப் படத்தை  புதிய இயக்குனர்  ஏ ஆர் கே  சரவண் இயக்க , கதாநாயகனாக  ஆதி நடிக்க  நிக்கி கல்ராணி  அவருக்கு இணையாக நடிக்க உள்ளார்.பி வி  ஷங்கர்  ஒளிப்பதிவில்,  புதிய இசை அமைப்பாளர்  திபு   இசை அமைக்க  தயாராகும் இந்த படம் விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளது.
 
“என் பள்ளி பருவத்தில் இருந்தே, சினிமா மீது எனக்கு எல்லையற்ற மோகம் உண்டு. எனக்கென்று ஒரு நிலையான பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உறுமீன் திரைப்படம் மூலம் நிறைவேறியது. அதனை தொடர்ந்து இளம் திறமையாளர்களுக்கு ஏணி படியாக இருக்க வேண்டும் என கருதி உருவாக்கப்பட்டது தான் ஆக்சஸ் பிலிம் நிறுவனம்.  பொதுவாக படத்தில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என பலரின் பங்கு இருந்தாலும்  அந்த திரைப்படத்தின் தலையாய பொறுப்புகள்  அனைத்தும் தயாரிப்பாளரையே சாரும். அந்த வகையில் தரம் வாய்ந்த படங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் ஆக்சஸ் பிலிம்ஸின்  முக்கிய குறிக்கோள். எங்கள் நிறுவனத்தின் இந்த இரண்டவாது படைப்பில், தனித்துவமான நடிகர் ஆதி மற்றும் தமிழ் சினிமாவின் தற்போதைய லக்கி ஸ்டாராக திகழும் நிக்கி கல்ராணி ஆகியோருடன் இணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நிச்சயம் எங்களின் இந்த ஆக்சஸ் பிலிம் நிறுவனம், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் அனைத்து திறமையாளர்களுக்கும் ஒரு  படிக்  கல்லாக அமையும் என நம்புகிறேன்” என்கிறார் டில்லி பாபு. 
Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articleஅனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு
Next articleVelainu Vandhutta Vellaikaaran Press Meet Stills