அனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு

குடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்கவைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இவ்விரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு.
ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜீத் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணியாற்றி பணக்காரன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பலதரப்பட்ட உணர்ப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பி.வாசு.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் இவர். சமிப காலங்களில் கன்னடத்தில்  விஷ்ணுவர்தன் நடிப்பில் அப்தரக்ஷகா, உபேந்திரா நடிப்பில் அரக்ஷகா, ரவிச்சந்திரன் நடிப்பில் திர்ஷ்யா, சிவராஜ் குமார் நடிப்பில் சிவலிங்கா என இவர் இயக்கிய அனைத்து படங்களும் அமோக வெற்றி பெற்று வசுலில் புரட்சி செய்தன.
தற்போது மீண்டும் தமிழ் படம் இயக்க ஆயுத்தமாகியுள்ள இயக்குனர் பி.வாசு தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்