‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் .
வருடா வருடம் தனது “மைம்” கலையின் மூலமாக நடத்தும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார் . இந்த வருடம் HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது . சென்னை காமராஜர் அரங்கத்தில் 14 .மே மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் சினிமாத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் மைம் கலையில் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது . அம்மா வின் அருமை பற்றி மைம் கோபி குழுவினர் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது. விழாவுக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர் .
விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் ….. மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழசசி …தனக்கு கிடைக்கும் சினிமா புகழ் மூலமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி , நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன். சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும் , நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன் .
நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன் . இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம் . கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல , ஒரு நல்ல இயக்குனராக எனக்கு தெரிகிறார் . தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும் இந்த குழுவினருக்கும் உண்டு என்று பேசினார் .
விழாவில் நடிகர் கிஷோர் பேசும்போது … கோபியை நான் பாராட்டுகிறேன் , பிரமாதமான ஒரு நிகழ்ச்சி ,எனக்கும் மைம் குழுவில் சேர்ந்து இது போன்று நடிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது , அடுத்த வருடம் நான் இந்த கலையை கோபியுடன் கற்றுக்கொண்டு இதே மேடையில் நடிப்பேன் என்றார் .
விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன் , கரு பழனியப்பன் ,மகிழ் திருமேனி ,பாலாஜி மோகன் ,சிவா , ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் , நடிகர்கள் காளி வெங்கட் ,சரவணன் , பாண்டி ,முரளி ,ஆத்மா ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .