திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க சட்ட திருத்தக் கூட்டம்

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க சட்ட திருத்தக் கூட்டம், கடந்த 8.5.2016 அன்று நடன இயக்குனர் தலைவர் திரு.ஷோபி பவுல்ராஜ் அவர்கள் தலைமையில் சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின் சங்க உறுப்பினர்கள் சுமார் 800 பேருக்கும் மற்றும் ஒய்வு பெற்ற உறுப்பினர்களுக்கும், மறைந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் அரக்கோணத்தில் 1000 சதுர அடி வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடன இயக்குனர்கள் திரு.சிவசங்கர், திருமதி.விமலா இராமநாராயணன், திருமதி.சாந்தி குமார், திருமதி.மாலினி, திருமதி.விஜயலக்ஷ்மி மற்றும் நடன கலைஞர்கள் திருமதி.தாட்சாயிணி, திருமதி.சுமதி ஹரி, திருமதி.சோனி மற்றும் திருமதி. சரஸ்வதி ஆகியோர் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செயலாளர் திரு.Y.சிவா, துணைத்தலைவர்கள் திரு.P.V.நோபல் (நடன இயக்குனர்), திரு.R.சுரேஷ், இணை செயலாளர் திரு.V.தினேஷ் குமார் (நடன இயக்குனர்), பொருளாளர் திரு.K.புவனசங்கர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் ஏராளமான நடன இயக்குனர்களும், நடன கலைஞர்களும் கலந்து கொண்டனர்.