2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் “மஞ்சப்பை”. அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் பாரட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்தது. ஆழமான கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதையும் அமைத்து இயக்குனர் ராகவா அனைவரையும் கவரும்படி இப்படத்தை இயக்கினார்.
தற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு “மிஸ்டர் மமகா” (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவா அவர்கள் இயக்கியுள்ளார். ரவி கௌடா, ஒவியா, ரங்கயனா ரகு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.
இயக்குனர் ராகவா தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்க மிகப்பெரிய பொருட்செலிவில் பிரம்மாண்டமாய் உருவாகிவரும் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா காடுபகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது.