மனநிறைவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நமீதா

ஆதரவற்ற குழந்தைகளோடு ஒரு குழந்தையாய் நமீதா.. உண்மையாகவே மனநிறைவுடன் தன் பிறந்த நாளைக் கொண்டாடியதைப் பார்க்க முடிந்தது, புரசைவாக்கத்தில் உள்ள அருண் ரெயின்போ என்னும் சேவை அமைப்பில் தனது பிறந்த  நாளைக் கொண்டாடினார்.

சம்பிரதாயத்துக்காக அவர் இந்த பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. இருக்க இடம்.. பாதுகாக்க பெற்றோர் என யாருமற்ற இந்தக் குழந்தைகளுடன் தன்னால் முடிந்த அளவுக்கு நேரத்தைச் செலவு செய்தார்..

அந்தக் குழந்தைகள் விரும்பியதை வாங்கித் தந்தும், அவர்களுக்கு கேக் ஊட்டியும் மகிழ்ந்தார். அவர்களுக்கு இரவு உணவு வழங்கிய பிறகு… குழந்தைகள் சாப்பிட்டு முடியும் வரை உடனிருந்து, உணவு நன்றாக இருந்ததா என்பதை உறுதி செய்த பிறகே கிளம்பினார். முன்னதாக காலையில் திருப்பதி கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டார்.