சிறப்பு தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகும் நலன் குமாரசாமி

சிபிராஜுக்கு இது அவரது கேரியரின் பொற்காலம் என்றால் மிகையில்லை.
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியின் மூலம் முன்னணி
ஹீரோக்களுக்கான வரிசையில் இடம் பிடித்துவிட்டார். நாய்கள் ஜாக்கிரதை
வெற்றி இளைஞர்களிடம் மட்டுமல்லாது குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து
சிபிராஜை அனைவருக்குமான ஹீரோவாக மாற்றிவிட்டது. இதனால் அடுத்தடுத்த
கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமும் அக்கறையும் காட்டும் சிபிராஜின்
பட வரிசையும் வெற்றிப்படங்களாகவே அமையப் போகிறது. அதில் அடுத்து
வரவிருப்பது இயக்குனர் அறிவழகனிடம் அசோஸியட் இயக்குனராக அனுபவம் பெற்ற
மணி செய்யோன் இயக்கும் கமர்ஷியல் படம்.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக உருவாகி வரும் இந்த படம்
விரைவில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரவிருக்கிறது.
இதில் இன்னொரு பெரிய சிறப்பு என்னவெனில், சூது கவ்வும், காதலும் கடந்து
போகும் என வித்தியாசமான அதே நேரத்தில் சூப்பர் ஹிட் படங்களை நமக்கு தந்து
சினிமாவுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாய் விளங்கும் நலன்
குமாரசாமி இந்த படத்தில் நடித்திருப்பது தான். படத்தில் மீன் மருத்துவராக
நலன் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும்.
கதையை கேட்டவுடனேயே நலன் நடிக்க ஒப்புக்கொண்டதோடு தன்னுடைய
கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்தும் முடித்துவிட்டார். ஆனால் இதனை இந்த
நிமிடம் வரை சஸ்பென்ஸாக வைத்திருந்து நமக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது
படக்குழு.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிபிராஜ், நலன் மட்டுமல்லாது
ஐஸ்வர்யா, காளி வெங்கட், யோகி பாபு, லிவிங்ஸ்டன், மைம் கோபி என நட்சத்திர
பட்டாளமே நம்மை குஷிப்படுத்த காத்திருக்கிறது.

Previous articleஓ(ட்)டு போட்ட வீடு ஒழுகாது. நழுவாது ஓட்டுப் போடுவோம்
Next articleKollidam Movie Official Trailer