தனது தாய்க்கு ஒரு கோவில் தாய் சிலையை தாய்க்கே பரிசளித்தார் ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் கட்டி உள்ளார். அந்த கோவில் எதிரிலேயே அவரது தாய் கண்மணிக்கு கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார் அது நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. இந்த கோயில் இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்பட உள்ளது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கோவிலின் புகைப்படத்தையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் எனது தாயாரின் சிலையின் புகைப்படத்தையும் இன்று அன்னையர் தினத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் லாரன்ஸ். உலகிலேயே உயரிய மந்திரமாக கருதப்படுவது காயத்திரி மந்திரம் அதனால் அந்த கோவில் கருவறையில் காயத்திரி தேவிக்கு திரு உருவ சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சிலைக்கு கீழே எனது தாய் கண்மணி தியானம் செய்வது போன்ற சிலை ஒன்று வைக்கிறேன். தெய்வத்துக்கு நிகரானவர் தாய்மட்டுமே அதனால் ஒரே கருவறையில் தெய்வத்தையும், தாயையும் சிலையாக வைக்கிறேன். அந்த சிலை ராஜஸ்தானில் பளிங்கு கற்களால் தயாராகிக் கொண்டிருக்கிறது.

என்னை கருவில் சுமந்து காப்பாற்றிய எனது தாய்க்கு கருவறையில் சிலை வைத்து பெருமை படுத்த வேண்டும் என்பதை எனது லட்சியமாக கொண்டிருந்தேன். தாயின் பெருமையை, அருமையை உலகத்திற்கு சொல்லவே நான் இந்த கோவிலை கட்டிக்கொண்டிருக்கிறேன்.

உலகிலேயே தாய்க்கு கோவில் அதுவும் தமிழ்நாட்டில், என்பதில் நான் பெருமைகொள்கிறேன். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே வளர்ந்து.. சிரமப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய அந்த தாய்க்கு இதே தமிழ்நாட்டில் கோவில் கட்டுவதுதானே நியாயம்.

இன்று என்னோட அம்மா நடைப்பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள் அப்போது செல்போனில் இருந்த அவரது சிலையின் புகைப்படத்தை காட்டும்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் மற்றும் எனது சகோதர் எல்வின்னும் அனைவரும் பார்த்து மகிழ்ந்தார்கள்..

இன்று (8 ம் தேதி) உலக அன்னையர் தினம்..இந்த கோவிலை உலகில் உள்ள எல்லா தாய்கும் சமர்பணம் செய்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறினார்.