விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் எழில்மாறன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

இதுவரை நான் நடித்த படங்களுக்கு மிகப்பெரிய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த நாள் என்னுடைய வாழ்நாளில் மிகமுக்கிய நாளாகும்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் எழில்மாறன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. இயக்குனர் எழில் இயக்கும்,இந்தப் படத்தில் விஷ்ணு விஷால்,நிக்கி கல்ரானி,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘எங்கேயும் எப்போதும்’,’நெடுஞ்சாலை’, ‘இவன்வேறமாதிரி’,’கதை திரைக்கதை, வசனம்,இயக்கம்’ போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா,இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை இன்று வெளியாகிறது .

‘நடிகர் சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் ’24’ படம் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகளில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் டிரெய்லரைக் காணலாம். சூர்யாவிற்கு எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் இப்படம் மிக பிரம்மாண்டமான வெற்றி பெற வாழ்த்துகிறோம்
.