ஹிட்லர் – எங்கிருந்தோ வந்தான்

450

 

இயக்கனர் திரு சுரேஷ் கிருஷ்ணா- சத்யா, அண்ணாமலை, பாட்சா, ஆஹா, சங்கமம், மற்றும் பல சுப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அவர் முதல்முறையாக பிரத்யேகமாக தொலைக்காட்சிக்காக ஹிட்லர்- எங்கிருந்தோ வந்தான் என்ற டெலிபிலிம் வழங்க உள்ளார்.

ZEE தமிழ் தயாரிக்கும் இப்புதிய படம் மே 29 அன்று பிற்பகல் 3.00 மனிக்கு ZEE தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.

வெறும் 9 நாளில் படமாக்கப்பட்ட இது குடும்பத்துடன் கண்டுகளிக்க தக்க பொழுதுபோக்கு சித்திரம்… 140 நிமிடங்கள் ஒடும் இப்படத்தில் 2 இனிய பாடல்களும் உள்ளது.

தேவயானை, டில்லி கனேஷ், பரத் கல்யான், மற்றும் புதுமுகங்களான அர்ஜுன்(துயாய்) மற்றும் பவித்தரா இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர்.

பாடல்கள் பா. விஜய், இசை – தேவா, நடன அமைப்பு – அசோக் ராஜா, ஒளிப்பதிவு – கனேஷ் குமார், வசனம் – சித்ராலயா ஸ்ரீராம், எடிட்டிங் – ரிசர்டு மற்றும் ஆர்ட் டைரக்கடர் – ஆனந்த்..

சுரேஷ் கிருஷ்ணா இந்த முயற்சி பற்றி பேசும் போது – இந்த மாதிரி குறைந்த பட்ஜெட்டில் தொலைக்காட்சி படம் எடுக்கும் அடிப்படை நோக்கம் என்னவென்றால், பல புதிய எழுத்தாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்புக்கு வழி வகுக்கிறது. சேனல்களுக்குகாக உருவாகும் இப்படங்கள் கலை உலகில் உள்ள பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு தரும் புதிய களமாக அமையும். நச்சுனு சொல்லனும்னா – கிரிக்கேட்டில் IPL போல இதுவும் புதிய திறமைசாலிகளுக்கும், தடம் பதித்த திறமைசாலிகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் ஒரு திறவுகோல்.

Previous article​கககபோ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது​​
Next articleEN APPA – IAS Sagayam Speaks About His Father