தமிழன் வீரத்திற்கும் புரட்சிக்கும் முதன்மையானவன். அன்று ஆங்கிலேயனை எதிர்த்த முதல் புரட்சியாளன் வீரபாண்டிய கட்ட பொம்மன்.இன்று புரட்சிக்குணம் குறைந்து நமக் கென்ன என்று இருக்கும் அலட்சிய மனோபாவமுள்ள மக்களை ஒரு ஜனநாயக புரட்சிக்கு அழைத்துச் செல்ல நாசர் தலைமையில் ஒரு குழு புறப்படுகிறது. தன்னுடன் மகேந்திரன, வினோத்குமார் ,தனு, அஜெய் ரத்தினம், ராகசெந்தில் ,மாயி,சுந்தர,என இணைத்துக்கொண்டு தன் படையுடன் புறப்பட்டிருக்கிறார் நாசர். நாசரின் புரட்சிப் போராட்டம் வென்று எடுக்குமா? என்பதை ரிவான் இயக்கத்தில் சீனீவாசப்பா தயாரிப்பில் K3 சினி கிரியேசன் நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘திட்டிவாசல்’ திரைபடத்தின் மூலமாக எதிர்பார்க்கலாம. புரட்சியை நோக்கி ‘திட்டிவாசல்’ பயணிக்கிறது