திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்டின் மற்றுமொறு புதியவர்களுக்கான புதிய முயற்சி

எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயல். அதிலும் சினிமாதுறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாகனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க தன் கை கொடுத்து உதவுவது போன்றதாகும்.

பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து பல திறமையான புதியவர்கள் உருவாக்கிய திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது சிறந்த கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து ஆன்லைனில் வெளியிடவுள்ளது.

இதன் முதல் கட்டமாக, அம்சத் மற்றும் லக்ஷ்மி பிரியா நடித்துள்ள “இஃக்லூ” என்னும் படத்தை வரும் ஜூன் மாதம் ஆன்லைனில் வெளியிட ஆயுத்தமாகியுள்ளது. ஸ்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ & ஸ்ரீ புரடக்க்ஷன் தயாரித்து பரத்மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைப்பும், குகன் S பழனி ஒளிப்பதிவும் செய்துள்ளனர். படத்தொகுப்பு பிரசன்னா GK, கலை இயக்கம் விஜய் ஆதிநாதன்.