எஸ்.மைதிலி குமாரி புரொடக்ஷன்ஸ் வழங்கும் எல்லாமே நீதான்

490

மைதிலி குமாரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “எல்லாமே நீதான் “ இந்த படத்தில் கே.எஸ்.சிவா எழுதி, இயக்கி தயாரித்து, நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நமரதா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். வில்லனாக ஜிந்தா நடிக்கிறார். மற்றும் ஜெயமணி, தெனாலி, சின்ராசு ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – கே.எஸ்.சிவா படம் பற்றி இயக்குனர் கூறியதாவது …

மருத்துவ கல்லூரி மணாவரான சிவா பொறியியல் கல்லூரி மாணவி மைதிலியை காதலிக்கிறார். சிவாவை சந்திக்க மைதிலி காத்திருக்கும்போது போதை ஆசாமிகளால் கடத்தப்பட்டு கொலையாகிறாள். தேடிப்போன சிவாவை ஆசாமிகள் கத்தியால் குத்த அதிலிருந்து தப்பி பிழைத்து காதலியை கொன்றவர்களை பழி வாங்க துடிக்கிறார் சிவா. அவருக்கு கல்லூரி மாணவர்கள் சிலர் உதவி செய்கிறார்கள். அதில் ஒரு பெண் சிவாவை காதலிக்கிறார் அவரது காதலை ஏற்றாரா இல்லை கயவர்களை பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை. முற்றிலும் காதல் கதையாக உருவாகி உள்ளது எல்லாமே நீதான்.

Previous articleKabali Movie Official Teaser
Next articleவிஷால், வடிவேலு, தமன்னா, சூரி நடிக்கும் கத்திசண்டை படம் துவங்கியது