வேடிக்கை பார்த்த அனைவரது நெஞ்சத்தையும் உருக்கிய படப்பிடிப்பு

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் அடுத்து இயக்கும் படம் “ நான் அவளை சந்தித்த போது” இதில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். சினிமா பிளாட்பார்ம் வழங்க VT. ரித்திஷ்குமார் படத்தை தயாரிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், பரத்கல்யாண், சிங்கமுத்து, ரங்கா, சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – எல்.ஜி.ரவிசந்தர். இயக்குனர் தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக இயக்குகிறார். நேற்று நடந்த படப்பிடிப்பில் நாயகனின் அம்மா இறந்திருக்க நாயகன் சந்தோஷ் இறந்து போன அம்மாவை பார்த்து அழும் காட்சி படமாக்கப்பட்டது. அக்காட்சி படமாக்கப்பட்ட போது நாயகன் நாயகி நடிப்பை பார்த்து படத்தின் இயக்குனர் அழுதது மட்டுமல்லாமல், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்களும், சுற்றியிருந்த லைட் மேன்களும் அழுதது அனைவரின் நெஞ்சத்தையும் உருக்குவதாக இருந்தது. குற்றாலம், அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.