கிராமி விருது பெற்ற டி.ஜே டிப்ளோ, அனிரூத்திற்கு பாராட்டுகளை பொழிந்துள்ளார்

கலிபோர்னியாவை சேர்ந்த, உலக புகழ் பெற்ற டி.ஜே இசை கலைஞர் டிப்ளோ, சமீபத்தில் அனிரூத் இசையமைத்து வெளியான ‘ஹோலாஹோலா அமிகோ’ என்னும் ‘ரம்’ திரைப்பட பாடலுக்கு தனது பாராட்டுகளை டிவிட்டர் வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். தனதுதனித்துவமான ராக், பாப் மற்றும் ஜாஸ் இசையால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் நடனம் ஆட வைத்த டிப்ளோதனது டிவிட்டர் பக்கத்தில் “மை இந்தியன் ப்ரண்ட்” என்று எழுதி அனிரூத்தின் ‘ஹோலா அமிகோ’ பாடலை பதிவு செய்துள்ளார்.இதனால், இதுவரை இந்தியாவில் மட்டும் புகழ் பெற்ற அனிரூத் தற்போது உலக இசை மேடையில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பதுஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. கபிலன் வைரமுத்து மற்றும் பாலன் காஷ்மீர் எழுதியுள்ள இந்த பாடலைஅனிரூத் இசையமைத்து பாடியுள்ளார், மேலும் இந்த பாடலின் ராப் பகுதியை பாலன் பாடியுள்ளது, பாடலுக்கு இன்னும் அழகுசேர்த்துள்ளது.

தமிழ்நாட்டு இசை கருவிகளையும், சென்னை தமிழையும் ஒன்றே இணைத்து பாடல் அமைப்பதில் வல்லவரான அனிரூத், புது புதுதிறமை மிக்க கலைஞர்களை தேடி செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ‘ஹோலா அமிகோ’ பாடலுக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்பாலன் காஷ்மீர். மலேசிய இசை உலகில் கொடி கட்டி பறக்கும் இவர் ஒரு ராப் இசை பாடகர் மற்றும் சிறந்த கவிஞர் என்பதால், இந்தபாடலை தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா மக்களும் பெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலின் மூலம் பாலன்காஷ்மீர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

‘தங்லீஷ்’ (தமிழ் + ஆங்கிலம்) எனப்படும் சொற்களை எப்படி சரியான இடத்தில் பயன்படுத்தி இசையமைப்பது என்னும் நுணுக்கத்தைநன்கு அறிந்த அனிரூத், இம்முறை சற்று வித்யாசமாக ஸ்பானீஷ் மொழிக்கு தனது கவனத்தை திருப்பியுள்ளார். ‘ஹோலா ஹோலாஅமிகோ, ஹோலா செனோரிட்டா’ என்னும் ஸ்பானீஷ் மொழியுடன் துவங்கும் இந்த பாடலுக்கு தமிழ் அர்த்தம் ‘வணக்கம் நண்பனே’என்பதாகும். அதனை தொடர்ந்து ‘அடுத்த தெருவில் கெடக்கும் குப்பைக்கு மூக்க நீ மூடுரியே! உனக்குள் குவிஞ்சி கெடக்கும் குப்பையமறச்சி ஓடுறியே!’ என்று தமிழில் தொடரும் இந்த பாடல், சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. மனிதனின் உண்மையான நிலை என்ன என்பதை எடுத்துரைக்கும் இந்த பாடல் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும்,குறிப்பாக அனிரூத் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பலர் “சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, புதுமுக நடிகரானாலும், ஒருபோதும் உன் திறமை குறைந்தது இல்லை” போன்ற வாசகங்களுடன் பேஸ்புக்மற்றும் டிவிட்டரில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற டி.ஜே டிப்ளோவின் வாழ்த்து, ஐந்து மாத இடைவேளைக்கு பிறகு அனிரூத்துக்கு கிடைத்திற்கும் பலனாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து, வரும் காலத்தில் டிப்ளோவோடு அனிரூத் கை கோர்ப்பார் என்று அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் இன் பிச்சர்ஸ் விஜயராகவேந்திரா தயாரிக்கும் இந்த ‘ரம்’ படத்தில் ஹ்ரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன்,மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.