‘ஹோலா அமிகோ’ என்பதற்கு நம் உணர்ச்சியை வெளிப்படுத்தல் என்று அர்த்தம்

உணர்வுகள் பலவிதம் , அது ஆளுக்கு ஆளு, இடத்துக்கு இடம்,என்று மாறுப பட்டுக் கொண்டே இருக்கும்.சில வார்த்தைகள் மொழிக்கு அப்பாற்பட்டு நமக்கு புத்துணர்ச்சி தரும். இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் அனிருத் , இசைக்கு உகந்த வார்த்தை எந்த மொழியில் இருந்தாலும் அந்த வார்த்தையை இசை மொழிக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமுடையவர்.க்யூபா நாட்டில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது கூறும் வார்த்தைதான் ‘ஹோலா அமிகோ’ என்பதுதான்.

ஆல் இன் pictures என்னும் பட நிறுவனத்தின் சார்பில் ராகவேந்திரா தயாரிக்கும் ‘ரம்’ படத்துக்காக அனிருத் இசை அமைத்து உள்ளப் பாடல் ஒன்று ‘ ஹோலா அமிகோ’ என்ற குறிப்பிடத் தக்கது.அவரது மற்றையப் பாடல்கள் போலவே இந்தப் பாடலும் வெளிவந்த சில வினாடிகளிலேயே இணையதளத்தை குலுக்கி விட்டது எனக் கூறலாம்.
‘ நான் க்யூபாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் போது ‘ஹோலா’ என்ற இந்த வார்த்தையை தெருக்களில் மக்கள் சகஜமாக உபயோகிப்பதைக் கண்டேன். அந்த வார்த்தையின் அர்த்தமும் , அதுக் கொடுக்கும் உற்சாகமும் அந்த வார்த்தையை என் பாடலில் உபயோகிக்க வைத்தது.’ என்கிறார் அனிருத்.