1998 விஜய் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படம் வெளியானது. என் சொந்த ஊரான பழனியில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது அதுதான் நான் பார்த்த முதல் சூட்டிங் ஸ்பாட். இதை “தெறி” படப்பிடிப்பில் விஜய்யிடம் சொன்னேன் அவ்வளவுதான் பிரின்ஸ் மனித வாழ்க்கை என்றுசொல்லி அழகாய் கடந்துபோனார் என்று சொல்கிறார் இன்றைய தமிழ்சினிமாவின் ஹைடெக் வில்லன் பிரின்ஸ்.
சண்டை பயிற்சி எடுக்கும் ஜிம்மில்தான் சிபி பழக்கம் அவர் நடித்த “நாய்கள் ஜாக்கிரதை” படத்தில் வில்லனாக அறிமுகமானேன். அதன் பிறகு “நான் சிவப்பு மனிதன்”, “பெங்களூர் நாட்கள்”, “தெறி” வரை ஒரு அண்ணனாக என்னை வழி நடத்துகிறார் விஷால். அண்ணன் என்று வெறும் வார்த்தைக்கு சொல்லவில்லை உயிர்ப்பின் குறியீடாய் சொல்கிறேன். சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியாக, ஊன்றுகோலாக ஒருவர் இருப்பார் எனக்கு அந்த ஒருவர்தான் விஷால் அண்ணன்.
“தெறி”க்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ஜீவாசங்கர் இயக்கும் “எமன்” படத்தில் த்ரோஅவுட் வில்லனாக நடிக்கிறேன். அதர்வா நடிக்கும் “செம போதை ஆகாது”, அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “உள்குத்து”, அஸ்வின் நடிக்கும் “திரி” கழுகு கிருஷ்ணா நடிக்கும் “பண்டிகை” ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.
வரும் காலங்களில் சைக்கோ தனமான வில்லன் வேடம் கிடைத்தால், தனித்த அடையாளத்தோடு தன்னை அடையாளப்படுத்த முடியும் என கூறுகிறார் ஹைடெக் வில்லன் பிரின்ஸ்.