நடிகர் அருண் விஜயின் 36 மணி நேர தொடர் த்ரில்லர் காட்சி !

‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று, எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தையும் தேர்வு செய்யாமல், தனக்கான கதையம்சம் கொண்ட திரைப்படத்தை தேடி கொண்டிருந்தார். அந்த தேடல் தற்போது ஈரம் புகழ் அறிவழகன் மூலமாக நிறைவேறி உள்ளது. பொதுவாகவே சண்டை காட்சிகளில் வித்தியாசத்தை எதிர் பார்க்கும் அருண் விஜய், இந்த மூலம் ரசிகர்கள் இடையே தனக்கு உள்ள action ஹீரோ இமகி தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கிறார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த திரைப்படத்தின் முக்கிய அங்கமான ஒருக் காட்சி படமாக்கப்பட்டது. சென்னை புற நகர் பகுதி ஒன்றின் மிகப்,பெரிய குப்பை கிடங்கில் காலை 6 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 36 மணி நேரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இடையில் எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெறும் இந்த படப்பிடிப்பு, 5 அதி நவீன கேமராக்களை கொண்டு படமாகப்படுவது, படத்தின் பிரமாண்டத்தை வெளிக்காட்டுகிறது. மேலும், குப்பை கிடங்கு என்பதால், எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, தீ அணைப்பு வாகனம் உள்ளிட்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ இந்த காட்சி படத்துக்கு உயிரோட்டம் தரும் காட்சியாகும்ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துக்கு இந்த மாதிரியான காட்சிதான் முக்கியம் அந்த முக்கியத்துவத்தைக் கருதி நாங்கள் நேர்த்தியாக திட்டமிட்டு , அதை செவ்வனே செயல் படுத்தியும் விட்டோம். அந்த திட்டமே இந்தக் காட்சியை 36 மணி நேரத்திலாவது எடுக்க வைத்தது, இல்லையென்றால் மேலும் நேரம் கூடி இருக்கும். உக்கிரமான வெயில், சகிக்க முடியாத நெடி ஆகிய உபாதைகளின் நடுவே நாங்கள் பணியாற்றியது , இந்தக் காட்சி சிறப்பாக வர வேண்டும் என்ற எங்கள் தீவிரத்தை உணர்த்தியது. வலி இன்றி வெற்றி இல்லை என்பதே எங்கள் குழுவின் தாரக மந்திரம். அந்த மந்திரம் எங்களை வெற்றிப் பாதையில் இட்டு செல்லும் என்பதில் நாங்கள் தீவிர நம்பிக்கையோடு இருக்கிறோம்’ என்றுக் கூறினார் அருண் விஜய்