ஈராஸ் நிறுவனத்தின் ஒரு கிடாயின் கருணை மனு

488

உலக அளவில் தரமான , மிகுந்தப் பொருட் செலவில் ஏராளமானப் படங்களை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தமிழில் தங்களது தடத்தை பதிக்க வருகிறது. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்றத் தலைப்பு இடப்பட்டு உள்ள இந்தப் படத்தின் கதை, நமது கலாச்சாரத்தின் முக்கியமான குறிப்பேடுகளை மையப் படுத்தி தயாரிக்கப் படும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார் விதார்த். மைனா, வீரம் ,ஆள் , முதல் தற்போது காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் குற்றமே தண்டனை ஆகியப் படங்களை தொடர்ந்து ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் இவர் நடித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

தென்னகத்தில் குறிப்பாக தமிழில் தங்களது தயாரிப்பு நிறுவனத்தை சீரிய முறையில் நிர்மாணிக்க இருக்கும் ஈராஸ் நிறுவனம், தயாரிப்பு நிர்மாணம், வடிவமைப்பு, விளம்பர யுத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சீரிய முறையில் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்க ஆரம்பித்து உள்ளது.’ஒரு கிடாயின் கருணை மனு’ இந்த நிர்வாகத்தின் கீழ் இயக்கப் படும் முதல் படமாகும். அருப்புக்கோட்டையில் துவங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

‘ தற்போது நாங்கள் பிராந்திய மொழிகளில் மிகுந்தக் கவனம் செலுத்தி வருகிறோம். வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்து எடுத்து நிறைய திறமைகளை அறிமுகப் படுத்தி எங்கள் நிறுவனத்துக்கு என்றே ஒருத் தனிப் பெயரை ஈட்ட முடிவு செய்தது உள்ளோம். அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு , அந்த மொழியின் வட்டாரத்தை சார்ந்த கதைகளை தான் நாங்கள் தேடி வருகிறோம். அப்படிப்பட்ட ஒருத் தேடலில் தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ கதையும் எங்களுக்கு கிடைத்தது.அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா இந்தக் கதையைக் கூறும் போதே நாங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டோம். தனக்கென ஒரு தனி பாணி அமைத்து வித்தியாசமான , தெளிவான கதைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து நடிக்கும் விதார்துக்கு இணையாக கதாநாயகியாக நடிக்கிறார் பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா. எங்களது அடுத்தடுத்த படங்களை நாங்கள் விரைவில் அறிவிக்க உள்ளோம். ஒரு சிலப் பெரிய பட்ஜெட் படங்களும் , பல சிறிய பட்ஜெட் படங்களும் இதில் அடக்கம் ‘ எண்டு தன்னம்பிக்கையோடுக் கூறினார் , ஈராஸ் நிறுவனத்தின் தென்னக பிரிவின் துணைத் தலைவர் சாகர் சத்வாணி

Previous articleஇப்படி ஒரு மனிதரை திரை உலகில் சந்திப்பது மிக அரிது – ரெமோ படக்குழு
Next articleVetrivel Movie Review By jackiesekar | M.Sasikumar | Mia George | D.Imman | Vasanthamani