குழந்தை பருவத்தில் இருந்தே இசையோடு விளையாடுபவர் லியான் ஜேம்ஸ்

சினிமா, வெவ்வேறு அங்கங்களை கொண்டிருந்தாலும் அதன் இதயமாக செயல்படுவது இசை தான். அப்படிபட்ட அந்த இசையை தனது குழந்தை பருவத்தில் இருந்தே கற்று கொண்டு தற்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார் லியான் ஜேம்ஸ். இவரின் தந்தை நோயல் ஜேம்ஸ், ஏ.ஆர் ரஹ்மானிடம் பல வருடங்களாக பணியாற்றியது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அதனால் தான் என்னவோ தனது அன்னையின் கருவினில் புரளும் போதே இசையமைக்க தொடங்கிவிட்டார் போல் இருக்கிறது லியான். ராகவா லாரன்சின் காஞ்சனா 2 படம் மூலம் அறிமுகமாகி, ‘வாயா வீரா’ பாடல் வழியாக மக்களை ஈர்த்த இவர் கீபோர்டிலும், கிட்டாரிலும் கைத்தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் இசை அமைத்திற்கும் கோ 2 வின் பாடல்கள் ரேடியோவில் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது.”2009ஆம் ஆண்டில் இருந்து நான் இசை துறையில் பணி ஆற்றினாலும், ஒரு முழு திரைப்படத்திற்கு இசை அமைத்தது முற்றிலும் வித்யாசமான அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் எல்ரட் குமார் என்னிடம் கோ 2 ஒரு பொலிடிக்கல் திரில்லர் என்று சொன்னதுமே கண்ணை மூடி கொண்டு சரி சொல்லிவிட்டேன். இம்மாதிரியான வித்யாசமான கதையம்சங்களுக்கு இசை அமைப்பது எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் தான், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் புதுமையான இசை கருவிகளையும் புது குரலையும் அறிமுக படுத்த வேண்டும் என்ற என் கற்பனைகளுக்கு உயிர் கொடுத்தது கோ 2 திரைப்படம் தான். மேலும் தற்போது iTunes இல், படத்தின் பாடல்கள் அனைத்தும் டாப் வரிசையில் இருப்பது உண்மையாகவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கோ 2 திரைப்படத்திற்காக நானும், என்னுடைய பிரம்மாண்ட லைவ் ஸ்ட்ரிங் இசை குழுவினரும், இரவு பகலாக கண்விழித்து உழைத்ததின் பலனை இப்போது நான் அனுபவிக்கிறேன். கண்டிப்பாக கோ 2 படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும்!” என்கிறார் இளம் இசை அமைப்பாளர் லியான் ஜேம்ஸ்.