தெறி திரைப்பட விமர்சனம்.
ராஜாராணி கொடுத்த அட்லியின் இரண்டாவது திரைப்படம். தாணு தயாரிப்பு….விஜய் போலிஸ் கேரக்டர்… இரண்டு ஹீரோயின்களாக சமந்தா, எமி என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது நிஜம். என்னதான் ராஜாராணி நன்றாக இருந்தாலும், மவுனராகத்தில் நாகசு செய்து ஓப்பேற்றப்பட்ட திரைக்கதை என்று விமர்சகர்ளால் விமர்சனம் செய்யப்பட்ட திரைப்படம் அது. சரி தெறி திரைப்படம் எப்படி?
சரி தெறி திரைப்படத்தின் கதை என்ன?
ஜோசப் குருவில்லா… தன் மகள் நிவியோடு கேரளாவில் பேக்கிரி வைத்து நடத்தி வருகின்றார்… அவருடைய மகளின் பள்ளி ஆசிரியைதான் எமி …ஆசிரியை எமிக்கு விஜய்மீது காதல் வருகின்றது.. எதிர்பாராத விதமாக ஒரு ரவுடி கூட்டத்தோடு மோத.. போலிஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து செல்ல.. அப்போதுதான் ஜோசப் குருவில்லா… விஜயகுமார் என்ற இன்னோரு பெயர் அவருக்கும் இருக்கின்றது என்ற உண்மை எமிக்கு தெரிய வர… அவர் யார் என்று விசாரிக்க பல உண்மைகள் வெளிவருகின்றன.. அவை என்ன என்ன என்று வெண்திரையில் பார்த்து கண்டு மகிழவும்.
==
தெறி படத்தின் சுவாரஸ்யங்கள்.
விஜய் போலிஸ் விஜயகுமாராக பட்டையை கிளப்பி இருக்கின்றார்..நிறைய காட்சிகளில் நெகிழ்ச்சி படுத்தவும் நடிக்கவும் செய்கின்றார்.. முக்கியமாக ரேப் விக்டிம்மிடம் என்னை அண்ணனா நெனைச்சி சொல்லும்மா என்று கண்களில் நீர்வழிய கேட்கும் போது படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களை ஈரமாக்குகின்றார். அதே போல சமந்தாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி இருக்கின்றார்.
எமிஜாக்சன் கதையை நகர்த்தி செல்ல பயண்பட்டு இருக்கின்றார். அதே போல கிளைமாக்சில் வரும் பாடலில் எமியின் காஸ்ட்யூம் சகிக்க வில்லை.
சமந்தா புடவையில் பாந்தமாக இருக்கின்றார்… இப்படியான பொண்ணை சைட் அடித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்று இளைஞர்களை நினைக்க வைக்கும் அளவுக்கு அழகில் நடிப்பில் மிளிர்கின்றார். ஒரு பாடலில் இளைஞர்களை சூடேட்டுகின்றார்.
ராதிகாவும் விஜய்க்குமான அம்மா சென்டிமென்ட் காட்சிகள் அருமை. அதே போல பிரபுவுக்கு வேலை இல்லை அவர்கள் வீட்டில் மகேந்திரன் சம்பந்தபட்ட காட்சிகளை எடுத்தமைக்காகவாவது அவருக்கு வெயிட்டான ரோலை கொடுத்து இருக்கலாம்.
உதிரிபூக்கள் இயக்குனர் மகேந்திரன் வில்லனாக நடித்து இருக்கின்றார் குழந்தையை சுடாமல் தண்ணீர் திறந்து விடும் காட்சி அருமை.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு அருமை என்றாலும் விஜய் குழந்தை இன்ட்ரோ காட்சியில் கேரளா என்று காட்டுகின்றார்கள். வறட்சியாக இருக்கின்றது.. ரோட்டில் தண்ணீர் கொட்டி அடிக்கடி மழை பெய்த இடம் என்று காட்ட பாடாத பாடு படுகின்றார்கள்…அதே போல எம்டி பிரேமில் பேருந்து செல்கின்றது.. பேருந்து விழுந்தஉடன் திபு திபு என்று மக்கள் கூட்டம் வருகின்றது. இதையெல்லாம் தவிர்த்து இருக்கலாம்.
============
பைனல்கிக்.
அட்லி இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கின்றார்.. சத்திரியன் திரைப்படத்தை நாகாசு வேலை செய்து கொடுத்து இருந்தாலும் விஜய் குமார் ஆவி மேட்டருக்கும் முன் பரபரப்பாய் செல்லும் திரைப்படம்… அதன் நொண்டி அடிக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்… கடைசி அரைமணி நேரத்தில் வில்லனுக்கும் மாஸ் ஹீரோவுக்குமான விஷயத்தில் தெறி பறந்து இருந்தால் இன்னும் அசத்தலாம் அமைந்து இருக்கும்.. இருப்பினும் படம் சூர மொக்கை என்று எல்லாம் சொல்ல முடியாது.. விஜய்ரசிகர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து சென்று ஒரு முறை ரசித்து விட்டு வரலாம்.
இந்த திரைப்படத்துக்கு ஜாக்கிசினிமாஸ் அளிக்கும் மதிப்பெண் ஐந்துக்கு மூன்று….
ஜாக்கிசேகர்.
14/04/2016
https://youtu.be/zN8KKc_r8cg