வசந்தமணி இயக்குனராக அறிமுகமாகும் “வெற்றி வேல்”

494

பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் வெற்றிவேல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த M.சசிகுமார் “வெற்றிவேல்” படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் டி.பி. கஜேந்திரனிடம் துணை இயக்குனராகவும், ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் இணை இயக்குனராகவும் பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு இப்படத்தில் நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷாஎன முன்று கதாநாயகிகளுடன் M.சசிகுமார் நடிக்கின்றார்.

காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன்,செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கபட்டுள்ளது.

டி இமான் படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு – J. அப்துல்லத்திப்

தஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.

இப்படம் மிக விரைவில் பட வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது

Previous article“பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு என் கதாப்பாத்திரமும் ரசிகர்களை கவரும்” – ஜனனி
Next articleYogiyan Varan Somba Thooki Ulla Vai Press Meet Stills