டீசர், போஸ்டர் டிசைன் பார்த்துவிட்டேசினிமா விமர்சனம் செய்கிறார்கள்: சங்கடப்படும் சந்தானம்

நடிகர் சந்தானம் பொது விழாக்களைத் தவிர்ப்பவர். அவர் நடித்த படவிழாக்களில் கூட அரிதாகவே கலந்து கொள்பவர்

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Ponniyin Selvan (PS1) Movie Release on Sept 30th Poster

யார் பற்றியும் நல்லதோ கெட்டதோ எந்தக் கருத்தும் சொல்ல மாட்டார். எதற்கு வம்பு என்று தவிர்த்து விடுவார். பிறரைப் பாராட்டுவதும் குறை கூறுவதும் செய்வதில்லை.

அப்படிப்பட்டவர் ‘ஒரு லைக் ஒரு கமண்ட்’ என்கிற ஒரு குறும்படம் பார்த்து கருத்து சொல்லி படக் குழுவினரை வாழ்த்தி ஊக்கப் படுத்தியிருக்கிறார்.

‘மாஸ்’ ரவி நடித்து இயக்கியுள்ள ‘ஒரு லைக் ஒரு கமண்ட்’ குறும்படம் பார்த்து விட்டு நடிகர் சந்தானம் பேசும் போது

” இப்போது எல்லாம் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்,மொபைல் என்று சினிமாவுக்கான ப்ரமோஷன் போய்க் கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் பேப்பர், ரேடியோ, டிவி என்றுதான் ப்ரமோஷன் போனது.

‘ஒரு லைக் ஒரு கமண்ட்’ என்கிற ஒரு குறும்படத்தை பேஸ்புக் என்கிற கான்செப்ட்டை வைத்து ரவி மிகவும் நன்றாக எடுத்திருக்கிறார்.
இப்போதெல்லாம் படத்தைப் பார்த்து விமர்சனம் செய்வதற்குப் பதில் படமே பார்க்காமல் டீசர், போஸ்டர் டிசைன் பார்த்துவிட்டேசினிமா விமர்சனம் செய்கிறார்கள்.இந்த தவறான போக்கு பற்றிய விழிப்பு ணர்வு ஏற்படுத்துகிறது. இந்தப் படம்.
இதில் இன்றைக்கு சினிமாவுக்கு தேவையான கருத்து இருக்கிறது ..

சினிமாவில் மட்டுமல்ல எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற மாதிரி இருக்கிறது. இது நிச்சயம் சினிமாவில் உள்ள எல்லாருக்கும் பிடிக்கும்.

ரவி நடித்து இயக்கியிருக்கிறார். இவர் சின்னத்திரையுடன் நின்று விடாமல் தொடர்ந்து பெரிய திரையிலும் வந்து சாதிக்க வேண்டும். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”.என்று கூறி வாழ்த்தியிருக்கிறார்.இதைக் கேட்டு பூரித்துக் கொண்டிருக்கிறது படக்குழு.

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Previous articleYogiyan Varan Somba Thooki Ulla Vai Press Meet Stills
Next article“அபிராமி ராமநாதனின் தயாரிப்பில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” – சொல்கிறார் மிஷா கோஷல்