ஜித்தன் 2
முதல் பாகம் நன்றாக இருந்த காரணத்தால் ஜித்தன் ரமேஷ் என்று ரமேஷுக்கு நாமகரணம் சூட்டிய திரைப்படம்.. தம்பி ஜீவா ஜெயித்து விட்டடார்.. ரமேஷூக்கு இன்னும் பிரேக் வரவில்லை..
இந்த படம் கொடுக்குமா என்பதை பார்ப்போம்.. அதை விட அதற்கு முன் ஜித்தன் திரைப்படத்தின் கதை என்ன என்று பார்த்து விடுவோம்.
ஜித்தன் திரைப்பட்த்தின் கதை..?
ஆவி கண்ணுக்கு தெரியுமா-? தெரியாது இல்லை..? அது போல ஜித்தன் படத்தின் கதை கடைசி வரை கண்ணுக்கு தெரியவில்லை.. இருந்தாலும் ஒரு குன்சாக புரிந்த வரையில் சொல்கிறேன்.
கொடைக்கானலில் ஒரு வீட்டை வாங்குகின்றார் ரமேஷ். ஆனால் அந்த வீட்டில் ஸ்ருஷ்ட்டி டாங்கே என்ற பேய் இருக்கின்றது. அவரை பாடாய் படுத்துகின்றது.. வீட்டை விற்கலாம் என்று பார்த்தால் அதுவும் முடியவில்லை.. பேயை விரட்டினாரா வீட்டை விற்றாரா என்பதுதான் ஜித்தன்2 படத்தின் கதை.. இந்த படத்தை ராகுல்இயக்கி இருக்கின்றார்
இன்டர்வெல்லுக்கு பிறகு ஏதோ சிரிக்க வைக்க முயற்சிக்கின்றார்கள்.. அந்த முயற்சியை முதல் பாதியில் எடுத்து இருந்தால் படம் கொஞ்சமாவது தெரி இருக்கும்..
இந்த திரைப்படத்துக்கு ஜாக்கிசினிமாஸ்‘ அளிக்கும் மதிப்பெண் ஐந்துக்கு இரண்டு…
ஜாக்கிசேகர்
09/04/2016
வீடியோ விமர்சனம்.
https://youtu.be/2kTbKZxC0Eo