“தமிழ் மொழி எனக்கு கடினமாக இருந்தாலும், அதன் மீது நான் காதல் வயப்பட்டிருக்கிறேன்! விரைவில் வெளியாக இருக்கும் ராஜா மந்திரி திரைப்படம் மூலமாக தான், தமிழ் ரசிகர்கள் என்னை எவ்வாறு ஏற்று கொள்கிறார்கள் என்பது தெரியும்”, என்கிறார் கேரளத்து அழகு புயல் ஷாலின் சோயா. இயக்குனர் சுசீந்தரனின் உதவியாளரான உஷா கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க, Etcetera Entertainment V மதியழகு, R ரம்யா மற்றும் இணை தயாரிப்பாளர் PG முத்தையா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். “இந்த படத்தில் நான் நடிக்க தொடங்கியதுமே, எனக்கு வேறு மொழிகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால் முதலில் தமிழக மக்கள் என்னை ஏற்று கொண்டால் தான் மற்றதை பற்றி யோசிக்க முடியும்”, என்கிறார் ஷாலின். மேலும் படத்தின் கதையை பற்றி அவர் கூறுகையில், “அண்ணன் – தம்பி இருவர்க்கும் இடையே ஆன உறவை எதார்த்தமாக கூறும் படம் தான் ‘ராஜா மந்திரி’. கலையரசன் மற்றும் காளி வெங்கட் நடிக்கும் இந்த படம் முற்றிலும் நகைச்சுவை அம்சங்களை கொண்டது” என்று சொல்கிறார் ஷாலின் சோயா. நடிப்பு மட்டும் இல்லாமல், இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஷாலின். தனது கல்லூரி காலங்களில் பல குறும்படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் ஷாலின் சோயாவிற்கு வெற்றி நிச்சயம் என்று உறுதியாக சொல்லாம்.