‘தொல்லைக்காட்சி’ – அஷ்வினின் அடுத்த மைல் கல்’

சமீபத்தில் வெளியான ‘ஜீரோ’ திரைப்படம் சினிமா விமர்சகர்களின் மத்தியில் பெரும் பாராட்டை பெற்ற நிலையில், நடிகர் அஷ்வினின் அடுத்த திரைப்படமான ‘தொல்லைக்காட்சி’  படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிய உள்ளது.எந்தவித  பின்பலமும் இன்றி , தன் திறமையை மட்டும் வைத்து கொண்டு தமிழ் சினிமாவில்  காலடி எடுத்து வைத்த அஷ்வினுக்கு தற்போது வெற்றிகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் தனது  அடுத்த படமான ‘தொல்லைக்காட்சி’ பற்றி கூறுகையில், ‘தற்போது உள்ள காலகட்டத்தில் தொலைக்காட்சி எவ்வாறு ஒரு மனிதனின் குணத்தை மாற்றுகிறது; சிலருக்கு அது நல்லதாக இருக்கலாம், சிலருக்கோ மோசமான சூழ்நிலையையும் உருவாக்கலாம் என்பதே இந்த படத்தின் கதை கரு!இந்த படத்தில் எனக்கு ஜோதிடத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவனாக இருக்கும் ஒரு கதாப்பாத்திரம்”என்கிறார் அம்சமான ஆறடி ஆண்மகன்  அஷ்வின். மேலும் படத்தின் அறிமுக இயக்குனர் சாதிக்கான், AR முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.”நடிகர்  அஷ்விநிந்தப் படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடித்துள்ளார்.. கிராமத்து பின்ணணியில் உருவாகும்  இந்த திரைப்படம்,சிரிக்கவும்,சிந்திக்கவும் ஒரு நல்லப் படமாக இருக்கும்” என்கிறார் இயக்குனர். திறமையானவர் என்றுப் பெயர் பெற்ற அஷ்வின் ராசியானவர் எனப்பெயர் அடையும் காலமிது.