விஷால் நடிக்கும் “ கத்தி சண்டை “

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக கத்திசண்டை படத்தையும் தயாரிக்கிறார்.

நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால் வடிவேலு ஏற்கனவே திமிரு படத்தில் இணைந்து நடித்து அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் தலைநகரம், மருதமலை இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.

கதாநாயகியாக நடிக்கும் அதிஷ்டம் யாருக்கு என்று தெரியவில்லை. மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதிரடிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் கத்திசண்டை படத்தை சுராஜ் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தை பக்கா கமர்ஷியல் மற்றும் காமெடி படமாக உருவாக்குகிறார்.
இந்த கத்திசண்டை படத்தை விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் இணைந்து பக்கா கமர்ஷியல், காமெடியாக உருவாக்குகிறார்கள். எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் கத்திசண்டை படத்தின் படிப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Previous article‘கனவு வாரியம்’ திரைப்படம் ‘ரெமி’ விருதை வென்றுள்ளது
Next articleKida Poosari Magudi Movie Posters