‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது

பொதுவாக தன் படங்களால் இளைஞர் சமூதாயத்தை கவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு பிள்ளையார் சுழி போட்டது ‘சென்னை 28’ திரைப்படம் தான்.கிரிக்கட்டை ஒரு மதம் போல் பாவிக்கும் இளைஞர்களை இந்த திரைப்படம் வெகுவாக சுண்டி இழுத்துவிட்டது. அதற்கு காரணம் குல்லி கிரிகட் எனப்படும் தெருவொரு கிரிகட் பற்றியப் படம் என்பதாலும்,அந்தக் கதைக்கு இடையே ஊருடுவும் காதலும் நட்பும் தான்.இரண்டாம் பாகம் எப்பொழுது என்று இயக்குனர் வெங்கட்பிரபுவின்  ரசிகர்கள் அவரை சமூக வலை தளங்களில் கேட்டுக் கொண்டே இறிந்தனர். சென்னை 28 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கி அதற்கான பதிலை தருகிறது கிரிக்கெட்டம், நட்பையும் மையமாக கொண்ட இந்த படத்தில் சுவாரசியம் மிகுந்த ஏகப்பட்ட காட்சிகள் இருக்குமாம். உற்சாகம் பொங்கத் துவங்கிய இந்த பூஜைக்கு படத்தை சேர்ந்த நடிக,நடிகையர்,மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர்.