அதீத பணம் வாழ்க்கைக்கு வரமா? சாபமா? என்பதை தெளிவுப்படுத்த வருகிறது ‘பைசா’ திரைப்படம்.

“காசு,பணம், துட்டு, மணி, மணி!!” என்ற வரிகளுக்கேற்ப இன்றைய கால சூழ்நிலை மாறிவருகிறது (இல்லை) மாறிவிட்டது என்றே சொல்லலாம். மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான் மிஞ்சும் என்பதற்க்கேற்ப்ப உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பைசா’. இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை சிறுவர்களை மையமாக கொண்ட ‘கோலி சோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ தரவரிசையில் இந்த திரைப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘பசங்க’, ‘கோலி சோடா’ புகழ் ஸ்ரீ ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை Confident பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ், RK ட்ரீம் வேர்ல்ட் மற்றும் இனைத்தயாரிப்பாளர் கராத்தே K ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.அறிமுக நடிகை ஆரா, நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர். K.P. வேல்முருகனின் ஒளிப்பதிவும், J.V. இசையும் படத்தை மென்மேலும் மெருகேற்றும் என்று எண்ணலாம். “என்னுடைய கதையம்சம் முழுக்க முழுக்க நிஜ வாழ்க்கை அனுவங்களை சார்ந்ததாகதான் இருக்கும். ஒரு சராசரி சினிமாவாசியின் மனதில் இந்த திரைப்படம் இடம் பெற்றால் தான், என்னால் அதை முழுமையான வெற்றியாக உணர முடியும்” என்கிறார் அப்துல் மஜீத்.