ரமீஸ் ராஜாவின் ‘டார்லிங் 2’ பயணம்

‘காக்க! காக்க! கனகவேல் காக்க!’ என்று ஆரம்பிக்கும் ‘டார்லிங் 2’ டிரெய்லர், தற்போது ஒன்பது லட்சம் பார்வையாளர்களை சமூகவலைதளங்களில் கடந்துள்ளது. தம் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மேல் காதல் கொண்ட அறிமுக நாயகன் ரமீஸ் ராஜாவிற்கு ‘டார்லிங் 2’ ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்! “பள்ளி நாட்க்களிலும் சரி, கல்லூரி நாட்க்களிலும் சரி, நடிப்பின் மேல் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்; அந்த ஆர்வமே, எனக்கு சில குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்தது. அந்த காலக்கட்டத்தில் தான், ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜகன் மூலமாக நான் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன். சில சந்திப்புகளில் நாங்கள் இருவரும் ‘டார்லிங் 2’ கதைக்குள் ஆழமாக இணைந்துவிட்டோம் . அதனை தொடர்ந்து, நடிப்பின் நுணுக்கத்தை நன்கு அறிய சில மாதங்கள் பயிற்ச்சியும் மேற்கொண்டேன். பொதுவாக புதுமுகத்திற்கு, சினிமா துறையில் அந்த அளவிற்கு ஒத்துழைப்பு இருக்காத நிலையில், என்னுடன் பயணித்த அனைவரும் எனக்கு சிறந்த தூணாக அமைந்திருந்தனர்!”

மேலும், படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா அவர்கள், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு அமைந்த ஓர் வரப்பிரசாதம் என்று சொல்கிறார் ராஜா. ” படத்தின் வெளியீட்டு நாளான ஏப்ரல் 1, எங்களுக்கு ஓர் மிகபெரிய நாளாக அமையும் என்று நம்புகிறேன்! இப்படத்தில் அனைத்து கதை அம்சங்களும் நிறைந்துள்ளது என்று நான் சொல்வதை விட, மக்கள் சொல்லும் நாளை தான் எதிர்பார்துக்கொண்டிருக்கிறேன்” என்று சிறு புன்னகையுடன் நம்மிடம் இருந்து விடை பெற்று கொண்டார் இளம் நாயகன் ரமீஸ் ராஜா!