பிக் பிலிம் international கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்க உள்ளார். நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . இவர்கள் இருவரையும் பிக் பிலிம் international பட நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அழகுராஜ். இந்த பட நிறுவனம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி இயக்குனர் அழகுராஜிடம் கேட்டோம்..
காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது. சின்ன திரை நிகழ்ச்சியில் மிக பிரபலமானது நாளைய இயக்குனர் தொடர். அந்த போட்டியிலிருந்து இதுவரை நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இயக்குனர் அழகுராஜ் இயக்கும் முதல் படம் தான் இந்த “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர்.