இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் ஒரு மெல்லிய கோடு

481

அக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ ஒரு மெல்லிய கோடு “  இந்தப்படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக  நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக  அக்ஷாபட், நேஹா சக்சேனா  நடிக்கிறார்கள். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.       அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது. படம் பற்றி இயக்குனர் A.M.R.ரமேஷிடம் கேட்டோம்…  நான் இயக்கிய அனைத்து படங்களுமே  நிஜ சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கினேன். இந்த படதின் கதை நிஜ சம்பவமா இல்லையா என்பதை படம் பார்க்கும் போது அறிவீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம். இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் இது. அவரது  பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம். அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் அணைத்து கட்ட பணிகளும் முடிந்துவிட்டது விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் A.M.R. ரமேஷ்

Previous articleSony Charista Glamourous Stills
Next articleNadigar Sangam AGM Meeting Full Event Stills