புகழ் -ஒருக் கோபகார இளைஞனின் கதை.

வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு கோபகார இளைஞாக நடிக்க  வேண்டும் என்றும் அந்த வேடம் தான் தங்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்து செல்லும் என்பதையும் தீர்மானமாக  நம்புகிறார்கள்.அந்த புகழ் ஒவ்வொருவருக்கும் ஒருப் படத்தில் கிடைக்கும். இதுவரை அப்பாவி இளைஞாகவும் , காதல் கதைகளில் சோபிக்கக் க்கூடியவராகவும் நடித்து வந்த ஜெய் ‘ புகழ்’  படத்தின் மூலம் ஒரு முழு நேர action ஹீரோ வாக தடம் பதிக்கிறார்.

உதயம் N H 4 மூலம்  சாக்லேட் பாய் இமேஜ் உடன் இருந்த சித்தார்த்துக்கு action hero அந்தஸ்துக் கொடுத்த இயக்குனர் மணிமாறன் ‘புகழ்’ படத்தின் மூலம் ஜெய் க்கும் அந்த புகழைக் கொடுக்கிறார்.ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் trailer படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்ப்பை தூண்டுகிறது. இளைஞர்களால் இளைஞர்களுக்கு தயாரிக்கப் படும்  இப்படம் விவேக் சிவா -மெர்வின் சாலமன் ஆகியோரின் இசையால் எல்லோரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.நாளை மார்ச் 18 முதல் உலகெங்கும் வெளி வருள்ள இந்தப் படம் ‘இன்றைய அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு’ என்ற முக்கியக்கருத்தை வலியுறுத்தும் படமாகும்.