பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ரோமியோ ஜூலியட் லஷ் மன் இயக்கத்தில் ஜெயம்ரவி, ஹன்சிகா மோத்வாணி, அரவிந்த்ஸ்வாமி நடிக்கும் போகன் படத்தின் படப்பிடிப்பு இன்று பின்னி மில்லில் பூஜையுடன் துவங்கியது..
இமான் இசையில் “ டமால் டுமீல் “ என்ற பாடல்காட்சி ராஜசுந்தரம் நடன அமைப்பில் ஜெயம் ரவி,வருண், நாகேந்திரபிரசாத் அக்ஷரா ஆகியோர் நடனமாட படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த பட துவக்க விழாவில், இயக்குனர் லஷ்மன், வேல்ஸ் யுனிவர்சிட்டி டாக்டர்.ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், ரோமியோ ஜூலியட் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்றனர்..