இளையராஜா குடும்பத்திலிருந்து மேலும் ஒரு இசையமைப்பாளர்

அலெக்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிக பிரமாண்டமான காமெடி கலந்த பேய்படம் “என்னமா…. கத வுடறானுங்க”

மும்பையை சேர்ந்த அர்வி இப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார் நாயகிகளாக அலிஷா சோப்ரா, ஷாலு நடிக்கின்றனர். இவர்களுடன் அம்பிகா, சீதா, செந்தில், மயில்சாமி, சாம்ஸ், ஜி.எம்.குமார், ரவிமரியா, அனுமோகன், சிங்கமுத்து, மதன்பாப் மற்றும் சிசர் மனோகர் நடிக்கின்றனர்.

இசையின் ஞானியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜா குடும்பத்திலிருந்து மேலும் ஒரு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய் ஆனந்த் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

.இப்படத்தின் சிங்கிள் டிராக் ப்ரோமோ பாடலை நேற்று வெளியிட்டார்கள். பேய் சம்பந்தப்பட்ட பாடலான இதை இயக்குநர் வெங்கட் பிரபு பாடியுள்ளார். மேலும் இந்த பாடலில் மொத்தம் 35 நடிகர்கள் தோன்றி நடனமாடியுள்ளார்கள்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இப்படத்தில் பாடல் பாடியுள்ளார்கள்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடந்துக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் மாதம் இப்படத்தின் இசையை வெளியிடயுள்ளனர்