ராஜ தந்திரம் 2 ஆறு நிமிட காட்சி முன்னோட்டம்

665

கடந்த வருடம் வெளி ஆன படங்களில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்த முக்கியமான படம் ‘ராஜ தந்திரம் ‘. மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லோராலும் பாராட்டப் பட்ட இந்தப் படம் விமர்சகர்கள் இடையே பெரிதும் பிரபலமானது. ‘ராஜ தந்திரம் ‘ என்றத் தலைப்பே ரசிகர்களை கவரும் பெரிய மந்திரம் எனலாம். இப்பொழுது அந்த தலைப்பே இரண்டாவது பாகமாக வர இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

அந்தப் பரவசத்தை முதல் அறிவிப்பிலேயே செய்து விட்டார் ராஜ தந்திரம் 2 படத்தின் இயக்குனர் செந்தில் வீரா சாமி. இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் பயின்றவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.’ராஜ தந்திரம்’ 2′ படத்தில் இருந்து ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்ட ராஜ தந்திரம் முதல் பாகத்தில் நடித்த வீரா உட்படமூன்று பேர் நடிக்கும் முக்கியக் காட்சியான ஒரு ஆறு நிமிட காட்சியை முன்னோட்டமாக வெளி இட்டு உள்ளனர் படக் குழுவினர்.

‘ராஜ தந்திரம் 2 படம் முந்தைய படத்திலிருக்கும் சுவாரசியம் ஒன்றுக் கூட குறையாமல், நிறைய சுவாரசியம் கூடித்தான் வெளி வரும்.எங்களுக்கு வலு சேர்க்க இசை ஜாம்பவான் இளைய ராஜா சார் இணைந்து இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பெருமை.இந்த வருடம் வெளி வரும் என்பதையும் , தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நிச்சயம் இருக்கும் எனக் கூறினார் செந்தில் வீராசாமி.

 

Previous articleரம் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் – நரேன்
Next articleDisney ropes in Mayur Puri to write the dialogues of the Hindi version of The Jungle Book