ஜெய் சுரபி இணைந்து நடித்து இருக்கும் படம் “புகழ்”

புகழ் படம் வருகின்ற மார்ச் 18 அன்று படம் வெளிவர இருக்கிறது  இந்த படத்தை இயக்குனர்
மணிமாறன் அரசியல் சாயம் பூசி எடுத்து உள்ளார் என்றே சொல்லலாம் இந்த படத்தின் கரு அரசியல்  இளையவர்களின் சக்தி எவ்வாறு இருக்கிறது என்பதே ஆகும்.
ஒரு சில சிறந்த நிகழ்வுகள் வரலாற்றில் தொடர்ந்து ஒரே தினத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது 
“மார்ச் 18” 94 வருடம் பின்பு பார்த்தால் இதே தினத்தில் தேச தந்தை மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசை 
எதிர்த்து போர் கோடி உயர்த்த உலகமே அதிர்ந்து போனது அன்று அதுவும் மார்ச் 18 அதே போல அரசியலில் இளையவர்களின் சக்தி முக்கியத்துவம் போன்ற முக்கிய அம்சங்களை கொண்ட படம் வெளியாவது இந்த வருட மார்ச் 18 ஆகா வரலாற்றில் சில நிகழ்வுகள் ஒரு சேர நடந்து நம்மை வியப்படைய செய்கிறது
சமகால இளைஞர்கள் சமுதாய தேவைகளை நோக்கி ஆர்வம் காட்டுவது  மற்றும் நீதியை அடையும்  வரை அயராது தங்கள் குரலை எழுப்புவது இது போன்ற கதை ஓட்டத்துடன் காதல்,மகழ்ச்சி,அதிஷ்டம் 
என இது போன்ற மசாலா தூவி அனைவரையும் கவரும் வண்ணம் புகழ் படம் இருக்கும் 
என இயக்குனர் மணிமாறன் குறிப்பிட்டுள்ளார்  
தற்போது தமிழகத்தில் தேர்தல் சூடு பிடித்து வருகிறது இந்த பருவத்தில் அரசியலில் இளைஞர்களின்  ஈடுபாடு பெரும்  முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வலுவான கருத்தை புகழ் படம் தாங்கி வருகிறது 
அனைவரையும் கவரும் வண்ணம் கமர்சியல் கலந்த அரசியல் படமாக இருக்கும் என 
புகழ் பட குழுவினர் கூறியுள்ளனர்   
திரைப்பட இயக்குனர்  மணிமாறன் புகழ் படத்தை பற்றி கூறும்போது  ஒரு இளைஞர் பற்றிய  கற்பனை கதையே  புகழ், அந்த இளைஞன்  வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள  விளையாட்டு மைதானமே படத்தின் முக்கிய இடம் அந்த விளையாட்டு மைதானமும்  அவரது வாழ்க்கையும்  ஒருங்கிணைந்த படமே “புகழ்”
அரசியல் ரீதியான அச்சுறுத்தல்  இளைஞர்களின்  மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கும் என்பதே படத்தின் போக்கு இந்த கார சாரமான அரசியல் பின் புலம் கொண்ட படத்தை ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக எடுத்து உள்ளேன் என்றார்