சக்தி வாய்ந்த சமூக பொறுப்புணர்வுள்ள கதாபத்திரத்தில் – நடிகர் இர்பான்

தமிழ் திரையுலகில் கடந்த 12 வருடங்களாக இர்பான் பணியாற்றி வருகிறார்.சின்ன துறையில் துவங்கி தற்போதுவெள்ளித்திரை என பல வருட உழைப்பிற்கு பிறகு அவர் வந்து நிற்கும் கரைதான் ‘ஆகம்’.

அவரது திரை பயணத்தில் சிறந்த இடத்தை பிடித்து தரப்போகும் ஆகம் படம் வருகின்ற மார்ச் 18 வெள்ளி அன்று திரைக்கு வரஇருக்கிறது இந்த படம் மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல் காலம் அவரின் கனவு 2020 பற்றிய படம் என படத்தின் நாயகன்இர்பான் கூறுகிறார்.

வரலாற்றில் மார்ச் 18 மிக முக்கிய தினம் காரணம் காந்தி ஜி வெள்ளைக்காரானை எதிர்த்து போர் கொடி தூக்கி உலகை திரும்பி பார்க்க வைத்த தினம் அந்த தினத்தில் ஆகம் படம் வெளியாக உள்ளது அதுவும் சமூகபிரச்சனையை கையில் எடுத்து கொண்டு வெளியாக இருக்கும் இப்படம் அப்துல் காலம் அவர்களின் இந்தியா வல்லரசு கனவுபற்றிய படம் என்று குறிப்பிட்டு இருப்பதால் இந்த படத்தை பற்றிய ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெருகிவருகிறது.

‘ நம் நாட்டில் ஒரு முக்கிய நெருக்கடியாக மாறியுள்ளது வேலை ஊழல் மற்றும் மூளை வடிகால், இதை அடிப்படையாகக்கொண்ட ஒரு சமூக திரில்லர் படமே ஆகம் நான் இந்த படத்தில் சமூக பொறுப்புணர்வுள்ள நபராக நடித்து உள்ளேன்வளர்ந்துவரும் நடிகனான நான் இந்தப் படத்தில் . நான் என் வயதை மீறிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன் அதே சமயத்தில் அதுபடத்தின் கதையை பாதிக்காத வண்ணம் நடித்து உள்ளேன் .என்னை அவ்வாறே இய்யகுனர் வேலை வாங்கி உள்ளார் என்றார்படத்தின் நாயகன் இர்பான் .

இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ஆகம் படத்தை மிகவும் புதுமையாக யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் உடன் எடுத்து உள்ளார் சிறந்த திரைக்கதை உடன் என்னை பார்க்க வந்தார் இயக்குனர் அவ்வாறேபடத்தையும் இயக்கினார் என்றும் கூறினார் படத்தின் நாயகன் கதைதான் எனவும் குறிப்பிட்டார் .

“Aaagam – தற்கால சமூகத்தில் இளையவர்கள் முன் இருக்கும் நெருக்கடியே கதை இந்திய நாட்டின் இளையவர்களின் மூளையை சர்வதேச நாட்டு கம்பெனிகள் எவ்வாறு விலைக்கு வாங்கி அடிமைபடுத்துகின்றனர் என்பதே கதை ஆகம் படத்திற்கு ஜில் ஜங் ஜக் புகழ் விஷால் சந்திர சேகர் இசை அமைத்து உள்ளார் படத்தைகோடீஸ்வர ராஜ் ஹேமா ராஜ் தயாரித்து உள்ளனர்.