ஈராஸ் நிறுவனத்தை மிரள வைத்த அட்ரா மச்சான் விசிலு இசை!..

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து, சென்ராயன் மற்றும் நைனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அட்ரா மச்சான் விசிலு”. இப்படத்தை திரைவண்ணன் இயக்கியுள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களை கேட்ட ஈராஸ் நிறுவனத்தினர் பெரிய விலை கொடுத்து பாடல்களின் உரிமையை பெற்றுள்ளனர். மேலும் இந்தப்படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின் “ஹிட்” பாடல்களாக அமையும் என தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் ஒரு பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். ரொம்ப பிசியாக ஜி.வி. நடித்து கொண்டு இருந்த போதும் பாடல் இசையை கேட்டு உடனடியாக பாடி கொடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வருகிற மார்ச் 24 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் காதுகளை குளிர வைக்க உள்ளது. படம் ஏப்ரல் 14 அன்று திரைக்கு வர உள்ளது.