Rajini murugan ( 2016 ) Movie Review | ரஜினி முருகன் திரை விமர்சனம்.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர்  லிங்குசாமியின் எதிர்காலத்தை   தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலிஸ் தேதி சிக்கலில்  சந்தித்துத்து  இதோ அதோ என்று போக்கு காட்டி வெளி வந்து இருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன்.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்பதுதான் ரஜினி முருகன் திரைப்படத்தின் கேப்ஷன்… நம்பி வந்தவங்களை மோசம் செய்ததா இல்லையா? என்பதை இப்போது பார்ப்போம்.

===

ரஜினிமுருகன்  திரைப்படத்தின் ஒன்லைன்.

தன்  தாத்தா சொத்தை விற்று  செட்டிலாகலாம் என்று நினைக்கும்  இளைஞன் சந்திக்கும் பிரச்சனைதான் ரஜினி முருகன்.

படத்தின் கதை…

சிவகார்த்திகேயன் சூரி  வழக்கம் போல  நண்பர்கள்… சிவாவின்தாத்தா ராஜ்கிரன்… அப்பா ஞான சம்பந்தம்… காதலி முற்றும்முறைபெண்கீர்த்தி சுரேஷ்… வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டு இருக்க சொந்த சொத்தை விற்க நினைக்கும் போது  அந்த ஊரில் வசிக்கும் சனி மூக்கன் சமுத்ரகனி நானும் ராஜ்கிரனுக்கு ஒரு பேரன்தான் என்று ஒரு குண்டை  தூக்கி போடுகின்றார் குண்டு வெடித்த்தா? இல்லையா ? சிவா என்ன செய்தார்?  சொத்து யாருக்கு கிடைத்தது போன்ற விஷயங்களை வெண்திரையில் பாருங்கள்.

=/=

சிவா ரஜினி மேனாரிசத்தை  கெட்டியாக பிடித்துக்கொண்டார்… சூரியோடு முதல் பாகத்தில் கலக்கியது போல இரண்டாம்பாகத்திலும் கலக்கினாலும் முதல் பாகத்தில் இருந்த பெரிய துள்ளல் இந்த படத்தில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகின்றது.

கீர்த்தி சுரேஷ் ஆப் சாரியில் அள்ளுகிறார்… உன்மேல கண்ணு சாங்கில் கண்ணை மறைத்து போதையாக பார்க்க… கீர்த்தி சுரேஷ் வீடு எங்கே என்று கூகுளில் தேட வைத்து விடுகின்றார்..

ராஜ்கிரண்  சிறப்பாக தன் பாத்திரத்தை செய்து இருக்கிறார்.. சமுத்ரகனி வில்லன் பாத்திரத்தை திறம் பட செய்துஇருக்கின்றார்..

இமான் பாடல்கள்  மூன்று பாடல்கள் ரசிக்க வைக்கின்றன… பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு  பெரிய பலம்…

 

=====

படத்தின் டிரைலர்.

====

படக்குழுவினர் விபரம்

Directed by Ponram
Produced by N. Linguswamy
N. Subash Chandra Bose
Written by Ponram
Starring Sivakarthikeyan
Keerthy Suresh
Samuthirakani
Rajkiran
Soori
Music by D. Imman
Cinematography Balasubramaniem
Edited by Vivek Harshan
Production
company
Thirrupathi Brothers Film Media
Distributed by Pen Movies
Release dates
14 January 2016
Running time
159 minutes
Country India
Language Tamil

====

பைனல்கிக்.

பெரிய வித்தியாசம் மற்றும் புதுமை இல்லையென்றாலும் ரஜினி முருகனை நம்பி பார்க்க போகலாம் காரணம் கொஞ்சம் நேரம் கவலை மறந்து சிரித்து விட்டு வரலாம்.

சொந்த வீட்டைவிற்பது தவறு என்பதையும்,  தென் மாவட்டத்து பஞ்சாயத்து டீடெயிலிங்கை இயக்குனர் பொன்ராம் திறம்பட  செய்துள்ளார்… அவருக்கு வாழ்த்துகள். பார்க்கவேண்டிய திரைப்படம் ரஜினிமுருகன்

=====

படத்தின் ரேட்டிங்..

பத்துக்கு ஏழு

====

வீடியோ விமர்சனம்.

 

https://youtu.be/0dR6iHQe68o

=========