வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்…
ராஜீவ்மேனன் உதவியாளர் அபிநிந்திரன் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் திரைப்படம்… 14 வருடங்கள் காத்து இருந்து அபிக்கு கிடைத்து இருக்கும் திரைப்படம்… இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
சரி…
வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் திரைப்படத்தின் கதை என்ன?
தென்மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டிக்கிச்சின்னு சொல்லுவாங்க இல்லை.. அது போல… சாதாரண கந்து வட்டிக்கு வாங்கின பிரச்சனை எப்படி தலைநகர் டெல்லி வரைக்கு ஆட்டம் கான வைக்குதுன்றதுதான் இந்த படத்தின் கதை.
===
படத்தின் சுவாரஸ்யங்கள்.
அபிநிந்திரன் முதல் படம்… ஆனால் கவுதம் மேனன் படம் பார்க்கறது போல ஒரு ஸ்டைல் இருக்கு…
புது முகங்கள் நடித்த படம் என்ற பீல் இல்லாமல் இருக்க படத்தின் மேக்கிங் இந்த படத்துக்கு பெரிய பலம்.
நாயகன் பிரவின்… கல்யாண சமையல் சாதம் திரைப்படத்தில் சப்போர்ட்டிங் ரோல் செய்தவர்.. முதலில் அவரை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளவைத்து விடுகின்றார்..
நயாகி ஷாலினி ஹைதரபாத் மாடல் சும்மா பின்னி இருக்கார்… சின்ன சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்ஸ்ல கலக்கி இருக்கார்… சான்சே இல்லை…மார்டன் டிரஸ்ல பின்னி இருக்கார்… செம கியூட் .. படத்துல நான் ரொம்ப ரசிச்ச விஷயம் ஷாலினி ஹிஹிஹி
ஆடுகளம் நரேன் பெரியவர் பாத்திரத்திலேயும்… கந்துவட்டி கேரக்டர்ல நடிச்ச கேமராமேன் பின்னி இருக்கார்.
கண்டிப்பாக ஒரு முறை இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.
வீடியோ ரிவியூவ்
https://youtu.be/7e2owOnUOk4