Pichaikkaran Audio Launch |பிச்சைக்காரன் திரைப்பட இசை வெளியீடு

1254

சிறு  கட்டி பெருக வாழ் என்ற வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ..?? இசையமைப்பாளர் ஆண்டனிக்கு பொருந்துகிறது..

இதுவரை அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய ஸ்டார் காஸ்ட் திரைப்படங்கள் இல்லை…  ஆனாலும் நஷ்டம் இல்லாமல் லாபத்தை கொடுக்கும் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார் என்று சினிமா வட்டாரமே பெருமை பொங்க சொல்கிறது..

சொல்லாமலே சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், பிச்சைக்காரன். புதுமுக இயக்குனர்களின் படங்களில்  மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி முதல் முறையாக வெற்றிப்பட இயக்குனருடன் பிச்சைக்காரன் திரைப்படம் மூலம் கூட்டனி சேர்ந்துள்ளார்…

Pichaikkaran-bagged-by-KR-Films-298d828029a6750aa7caee4f46830feab

பிச்சைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது…

விழாவில் பேசிய  நாயகன் விஜய் அண்டனி நெகிழ்ச்சியின் உச்சமாக  பேசினார்.. பலர் போட்ட  பிச்சைதான் இந்த வாழ்க்கை அவர்களை என்றும் மறக்கமாட்டேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்..

விழாவில்   பேசியஇயக்குனர் முருகதாஸ்.. தான்  படத்தின் டைட்டிலை மாற்ற  சொன்னதாகவும்… ஆனால் இயக்குனர் சசி கடைசி வரை  தன் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்…. டைட்டில் என்பது சென்டிமென்ட் அல்ல… அது படத்துக்கான குறியீடு என்று சொன்னார்.

இயக்குனர் சசி பேசுகையில் இன்னமும் தனது நட்பை இன்னும் மறக்காமல் இருக்கும் இயக்குனர் முருகதாசுக்கு நன்றி கூறினார்.

பிச்சைக்காரன் ஆக்ஷன் மசலாவுடன் கலக்க   விரைவில் வெளிவர இருக்கிறான்…

 

 

Previous articleMost Anticipated movie Achcham Yenbathu Madamaiyada | A R Rahman | STR | Gautham Vasudev Menon
Next articleவெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்…