இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவவர இருக்கும் திரைப்படம் இறைவி ..
வழக்கம் போல அவருடைய ஆஸ்த்தான நாயகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிக்கின்றார்கள். ஆனால் இறைவி படத்தில் புதுவரவாக எஸ்ஜே சூர்யா நடித்து இருப்பதுதான் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது…
கார்த்திக் இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படம்.. ஜிகர்தண்டா வசூலில் பின்னடைவு இருந்தாலும் மேக்கிங்கில் அசத்தி இருப்பார்… அதனாலே இறைவி படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறிகிடக்கின்றது என்றால் அது மிகையில்லை..
இந்த படத்தில் சில பெண்களின் கதையை பதிவு செய்வதாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டிரைலர் சொல்கிறது…
காத்திருப்போம்… என்ன சொல்லி இருக்கின்றார் என்று…??
பத்து படம் இயக்கிய இயக்குனருக்கு இருக்கும் ஒரு ரசிகர் கூட்டம்… இரண்டே இரண்டு திரைப்படம் இயக்கிய கார்திக்சுப்புராஜ்க்கு இருப்பது அவரது திறமைக்கு சான்று என்பேன்..