In Order of Disappearance ( 2014 ) movie review by jackiesekar | world movie norway

In-Order-of-Disappearance_poster

 

இன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ்.

 

அழகான மனைவி….

ஒரே ஒரு பையன்…

நார்வேயின் புற நகரில்   தேசிய நெடுஞ்சாலைகளில்  பனி குவிந்து இருந்தால்… அதனை  விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது  நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும்  வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம்.

பனி என்றால்  நம்ம  ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல….  தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட  சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்..

நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே…  கொடைக்கானலில்  ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு   இருக்கும் சமாச்சாரத்தை  சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும், பனி பெய்தால் காதில் பஞ்சி வைத்துக்கொண்டு செல்லும்  புண்ணியவான்களுக்கும்  நார்வே வாழ தகுதி இல்லாத நாடு என்பதை அறிக…

அப்படியான இடத்தில் நீல்ஸ் தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்….

ஒருநாள் அவரது  பிள்ளை இறந்து விட்டாதாக  போன் வருகின்றது.

பையன் என்றால் 20 வயது மதிக்கத்தக்க பிள்ளை…  எர்போர்ட்டில் லக்கேஜ் ஏற்றிக்கொண்டு செல்லும் வண்டியை இயக்குபவன்…

ஒரே ஒரு ஆண் பிள்ளை…   நானே இன்னும் சாவாம இருக்கேன்.. அதுக்குள்ள அவன் எப்படி இறப்பான் என்ற கேள்விக்குழப்பத்தோடு… ஆனால் தெளிவாக நீல்ஸ் தன்   மனைவியை அழைத்துக்கொண்டு  பிரேத பரிசோதனை  இடத்துக்கு வருகிறான்..

வந்து பார்த்தால் மகனுக்கு எந்த சின்ன கீறலும் இல்லாமல் இறந்து கிடக்கின்றான்… அட ஒரு விபத்தில் போய்  சேர்ந்து இருந்தாலும் விபத்து  நடந்து விட்டது .. யார் என்ன  செய்யமுடியும் ? என்று மனதை தேத்திக்கொள்ளலாம்.. ஆனால்  எந்த பிரச்சனையும் அவனுக்கு இல்லை… காதல் கத்திரிக்காய், உடல் உபாதையும்  ஏதும் இல்லாமல்  வாழவேண்டிய பையன் இறந்து கிடக்கின்றான்.

அது மட்டுமல்ல  கேஸ் ஆப் டெத்  என்ன? என்று விசாரித்தால்.. உங்க பையன் அளவுக்கு அதிகமான  போதை பொருள் எடுத்துக்கொண்டதால் இறப்பு சாத்தியமாகியுள்ளது என்று மருத்துவர் கை விரிக்கின்றார்..

நீல்ஸ் என் மகனுக்கு அந்த பழக்கமே இல்லை என்று வாதிட்டாலும் அடாப்சி ரிப்போர்ட் அதைதான் சொல்கிறது என்று டாக்டர் வாதிடாமல் அடுத்த வேலை பார்க்க போகின்றார்…

நீல்ஸ் நிச்சயமாக  தன் மகன் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இல்லாதவன் என்பதில் திடமா நம்பினாலும், ஒருவேளை எடுத்து இருந்தால் என்ற எதிர்கேள்வி கேட்கும் போது நிச்சயம் நீல்ஸ் மனம் அலைபாய்ந்துகொண்டு இருந்தது..

சரி இனிமே வாழ்ந்து என்ன மயிர புடுங்க போறோம் என்ற தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கும் போது  ஒரு டுவிஸ்ட்… மகன் இறப்பு கொலை… என்ற செய்தி கிடைக்கின்றது…

சாவபோனவனுக்கு இந்த செய்தி வந்தால்  என்ன செய்வான்.. வந்தால் மலை போனா மயிறு என்று களத்தில் இறங்கமாட்டோம்.. எஸ் நீல்ஸ் எப்படி வயதானாலும் தன் மகனை கொலை செய்தவர்களை பழி வாங்குகின்றார் என்பதை சாப்டர்  சாப்டராக  அற்புதமான  கிரைம் திரில்லராக இந்த திரைப்படம் நம்  கண் முன் விரிகின்றது.

பட்த்தின் சுவாரஸ்யங்கள்..

ஸ்லோவாக இருந்தாலும் இன்ரஸ்டிங்கான திரைக்கதை… இத்தனைக்கும் எத்தனையோ பழி வாங்கும் படங்களை நாம் பார்த்து இருகின்றோம்.. ஆனாலும்  பழிவாங்குவது அதுவும் தனி ஒருவனாக   போதை பொருள் கும்பலை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயம் இல்ல..

நன்றாக இருக்கின்றது…..

டிஸ் அப்பியரன்ஸ் ஆகும் பெயர்கள் மற்றும் செப்டர் குளோஸ் செய்யும் இடங்கள்  அருமை.

 

சினிமாட்டோகிராபி சான்சே இல்லை… படத்தின் பெரிய பலம்…

========

படத்தின் டிரைலர்.

======

படக்குழுவினர் விபரம்.

 

Directed by                           Hans Petter Moland

Produced by                          Stein B. Kvae

Written by                             Kim Fupz Aakeson

Starring                                 Stellan Skarsgård

Music by                                Brian Batz

Kaspar Kaae

Kåre Vestrheim

Cinematography                   Philip Øgaard

Edited by                               Jens Christian Fodstad

Release dates

10 February 2014 (Berlin)

21 February 2014 (Norway)

Running time

115 minutes

Country                                 Norway

Sweden

Denmark

Language                               Norwegian, Swedish, English, Serbian, Germa

=======

பைனல் கிக்..

 

நார்வேயின் பனி அழகை கண்டு களிக்கவும்.. ஒரு சுவாரஸ்ய  திரில்லருக்காகவும்

கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்… காரணம்  பிரசன்ட்  செய்த விதம்.

====

நம்ம வீடியோ விமர்சனம்.

https://youtu.be/CBGzDqHe9yA

 

ஜாக்கிசேகர்.

24/12/2015

follows on

http://www.jackiecinemas.com/

http://www.jackiesekar.com

https://www.facebook.com/JackieCinemas

https://twitter.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas