வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்… தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம் விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்…
======
தங்கமகன் திரைப்படத்தின் ஒன்லைன்?
தன் குடும்பத்துக்கு ஏற்ப்பட்ட அவப்பெயரை தனுஷ் எப்படி துடைக்கின்றார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்
====
தங்கமகன் திரைப்படத்தின் கதை என்ன?
ரவிக்குமார் ராதிகா தம்பதிக்கு ஒரே மகன் தனுஷ்… எமியை காதலிக்கின்றார்.. கைகூடவில்லை.. அப்பாவுடன் வேலைக்கு போகின்றார். சமந்தாவை திருமணம் செய்து கொள்கிறார்… நல்லா குடும்பம் போய்கிட்டு இருக்கும் போது பிரச்சனை வரனும் இல்லை.. அப்பா கேஎஸ் ரவிக்குமார் மூலம் வருகிறது.. தனுஷ் குடும்பத்துக்கு ஏற்ப்பட்ட அவப்பெயரை எப்படி துடைக்கின்றார் என்பதுதான் படத்தின் கதை.
======
படத்தின் சுவாரஸ்யங்கள்..
தனுஷ் நடிப்பில் பட்டையை கிளப்புகின்றார்..ஆனால் மீசையில்லாத காட்சிகளில் சகிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும்… ஆனாலும் முதல் பாதியில் சதிஷ்உடன் அடிக்கும் லூட்டி அருமை..பின்பாதியில் மெச்சூர்டு பேசில் விசீகரிக்கிறார்..
சமந்தா… மாடன் கேர்ள்இந்த படத்தில் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறார்.. ஒரே ஒரு சுடிதார் தவிர ஒட்டு மொத்தமாக கோ ஆப்டெக்சில் ஹோல்சேலில் வாங்கிய புடவையில் வளைய வருகின்றார்.. பெரிய பொட்டு , முடித்த கொண்டை.. காப்பி என்று அக்மார்க் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்.
எமிஜாக்சன் தனுஷ் லவ்கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாலும் தமிழ் கலாச்சரா பண்டலுக்கு சிக்க மறுக்கின்றார்… தனுஷோடு லிப் லாக்கில் ஈடுபடும் போது காதில் புகைவர வைக்கின்றார்.
சதிஷ் நன்றாகவே கவுண்டர் கொடுத்து நடித்து இருக்கின்றார்….
கூட்டுக்குடித்தன வீட்டில் காமத்தோடு இருக்கும் புதுமண தம்பதிகளின் பெற்றோர் காதில் பஞ்சு வைத்துக்கொள்வது…
மொட்டை மாடி கட்டிலில் படுத்த படி முன்னாள் காதலிக்கு பெட் போட்டுகொடுத்தியே என்று போசசிவ்வாக பேசி தனுஷும் சமந்தாவும் லவ் பண்ணும் அந்த காட்சி ஆவ்சம் என்று சொல்லலாம்.
======
படத்தின் குறை..
எமிஜாக்சன் தனுஷ் பிரிவில் ஒரு செயற்கைதனம் இருக்கின்றது… யூகிக்க கூடிய திரைக்கதை… அதனால் இரண்டாம் பாதி தொய்வாகி விடுவதை மறுப்பதற்கில்லை..
======
படத்தின் டிரைலர்.
=====
படக்குழுவினர் விபரம்.
Directed by Velraj
Produced by Dhanush
G. N. Anbu Chezhiyan
Written by Velraj
Starring Dhanush
Samantha
Amy Jackson
Music by Anirudh Ravichander
Cinematography A. Kumaran
Edited by M. V. Rajesh Kumar
Production
company
Wunderbar Films
Gopuram Films
Distributed by Sri Green Productions[1]
Release dates
December 18, 2015
Country India
Language Tamil
==========
பைனல் கிக்.
150 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படத்துக்கு போனா மொக்கையான படமா இருக்கும்ன்ற பயம் வேண்டாம்… நிச்சயம்.. இந்த படம் பேமிலி டிராமா.. குத்துப்பாட்டு ஆக்ஷன் மசலா ரசிகர்களுக்கான ஹீரோயிச படம் இது அல்ல… கண்டிப்பாக முதல் பாதிக்கும் சமந்தா தனுஷ் கெமிஸ்ட்ரிக்கும் அவசியம் பார்க்கலாம்.
====
படத்தின்ரேட்டிங்..
பத்துக்கு ஏழு..
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
வீடியோவிமர்சனம்.
https://youtu.be/_utTo9m3Wy8