Uppu Karuvadu movie review by jackiesekar

உப்புக்கருவாடு.

2004  ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்…  இயக்குனர்  ராதாமோகன்…

2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா  தியேட்டரில்  முதல்   நாள் முதல் காட்சிக்கு சென்று  அழகிய தீயே படத்தை பார்த்தோம்… காரணம் அந்த படத்தின் போஸ்டர்கள்  படத்தை பார்க்க வேண்டும்  என்ற எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்…  இத்தனைக்கும் பெரிய ஸ்டார் காஸ்ட் அந்த படத்தில் இல்லை…

எல்ஐசி மவுண்ட்ரோட் சிக்னலில்  மேல் படுத்து இருப்பது என்று டிசைன் டிசைனாக  பப்ளிசிட்டியில் கற்பனை குதிரையை பறக்கவிட்டு  இருந்தார்கள்…

அந்த படம்  மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படம்… பொதுவாக ராதாமோகனின் பாடங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை உண்டு செய்யும்…

11 வருடத்துக்கு பிறகு அழகிய தீயே திரைப்படத்தின்  உப்புக்கருவாடு என்ற பெயரில் இரண்டாம்பாகத்தை எடுத்து இருக்கின்றார்….….

ஒரே வித்தியாசம் என்னவென்றால்…ராதாவின் ஆஸ்த்தான  டயலாக் ரைட்டர் விஜி இல்லாமலும் டுயட் மூவிஸ் தயாரிப்பு இல்லாமலும் களம்  முதன் முறையாக தனித்து களம்  இறங்கி இருக்கிறார்.

விஜிக்கு பதில் பொன் பார்த்தீபன்  இந்த படத்துக்கு டயலாக்  எழுதி இருக்கிறார்…

======

உப்புக்கருவாடு திரைப்படத்தின் கதை என்ன,??

அழகிய தீயே திரைப்படத்தில் சந்திரன்  கேரக்டர் படம் இயக்க வாய்ப்பு தேடி அலையும்.. அதன் காதல்… கடைசியாக   சந்திரன் படம் இயக்குவதாக முடியும்…இந்த படத்தில் சந்திரன் என்ற இயக்குனர்… முதல் படம் சரியாக போகவில்லை… இரண்டாம் படம் பாதியில் நின்று விட்டது… மூன்றாம் படம்  தான் அவனின் ஒரே நம்பிக்கை… அந்த படத்துக்கு  வாய்ப்பு தேடி அலைய… அவனுக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவன் பல சிக்கல்களை சந்திக்கிறான்… சந்திரன் என்ற உதவி இயக்குனரின் மூன்றாம் முயற்சியான நம்பிக்கை  திரைப்படம் வெற்றிபெற்றதா இல்லையா ? என்பதை வெண்திரையில் காணுங்கள்.

=========

 

அழகிய தீயே  திரைப்படத்தை எப்படி உதவி இயக்குனர்கள்   அவசியம் பார்க்க வேண்டிய திரைப்டம் என்று சொல்வேனோ… அதே போல உப்புகருவாடு திரைப்படத்தையும் உதவி இயக்குனர்கள் அவசியம் பார்க்க வேண்டும்…

கதையின்  நாகனாக கருணாகரன்… இயல்பான பேச்சும் கவுண்டர் டைமிங் கை கொடுத்தாலும்.. காதல் காட்சிகளில் வெளிப்படுத்தும் பார்வையில் கூச்சம் பிடுங்கி தின்ன கொஞ்சம் டரியல் அகி போகின்றார். ஆனாலும் ஏன் சார் எம் படத்தை தடை பண்ணிறிங்க… உங்க மனசு இதுக்குமட்டும்தான் புண்படுமா என்று   சமுகத்தில் மனது புண்படும் விஷயத்தை உணர்ச்சிகரமாக பட்டியல் இடும் போது ரசிக்க வைக்கின்றார்.

நந்திதா குமுதா ஹேப்பி அண்ணாச்சி போல  சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்… நன்றாக  நடித்துஇருக்கின்றார்… ஆனால்  அவர்  பேசும் பேச்சு நகைச்சுவைக்காக கேரகடர் என்றாலும் சில இடங்களில்  கடுப்படுக்கின்றது.. பட் இரண்டாம் பாதியில் அசத்துகின்றார்.

ராதா மோகனின் ஆஸ்தான நடிகர்கள் எஸ்எஸ்பாஸ்கர் மற்றும் குமரவேல்  நிறைவான பாத்திரம் பெற்றும்  நெகிழ்வான  நடிப்பை வழங்கி இருக்கின்றார்கள்…

அதித்யா  சேனலில் கலக்கிய டாடி எனக்கு ஒரு டவுட் டீம் பின்னி இருக்கின்றார்கள்… அதை விட அந்த தப்பு தப்பான இங்கிலிஸ்… நடிப்பு சாமியார் நன்றாக ஸ்கோர் செய்கின்றார்…

உமா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ரஷிதா இயல்பான உடல் மொழியில் பின்னி இருக்கின்றார்.. அதுவும் நந்திதா நடிக்க வேண்டிய காட்சியை நடித்து காட்ட வேண்டிய  காட்சியிலும்  மொட்டை மாடியில் கருணாவுக்கு டிரஸ் கொடுத்துவிட்டு சில விஷயங்களை சொல்லி புரியவைக்க   வேண்டிய விஷயம் இல்லை என்பதை மிக அழகாக கண்காளாலும் சொல்வது கவிதை.. மிக மிக அற்புதமான சீன்.

மயில்சாமி, வெகு நாட்களுக்கு பிறகு அவருக்கு கொடுத்த வாய்ப்பை நன்றாகவே செய்து இருந்தாலும் படத்துக்கு பெரிய பலம் சாம்ஸ்தான்.. மனிதன் கவுண்டரில் பின்னுகிறார்… சாம்ஸ் பெரிய அளவில் இந்த படத்துக்கு பிறகு வருவார் என்பது நிச்சயம்..

படத்தின் டயலாக் விஜியின் ஆல்டர்நெட்.. பொன்  பார்த்தீபன்… பின்னி இருக்கின்றார்… ராதாவின் பலம்  தெரிந்து எழுதியுள்ளார்.

மகேஷ்முத்துசாமிக்கு பெரிய ஸ்கோப் இல்லை.. காரணம்  லோ பட்ஜெட் படம் … அவசர அடியில்  முதல் பாதியை எடுத்து இருக்கின்றார்கள்… ஒரு மாதிரி டிவி சீரியல் பார்க்கும் உணர்வை  கொடுப்பதை மறுக்க முடியாது..

 

அதே போல ராம்ஜி நரசிம்மன் இந்த படத்தை தாயாரித்து இருக்கிறார்…  அவுரா சினிமாஸ் படத்தை வாங்கி வெளியிட்டு இருக்கின்றார்கள்….

படத்தில் இரண்டு  கோடியில் ஒரு படம்.. ஒரு  கோடியில் பப்ளிசிட்டிஎன்று மயில் சாமி அடிக்கடி சொல்லுவார்…ஆனால் படத்தை   வெறும் 55 லட்சத்தில்  எடுத்து இருப்பது பிரேம்களிளிலும் லொக்கேஷன்கபளிலும் தெரிகின்றது… கடற்கற்கரையோரம் மற்றும் நாகேஷ்வரராவ் பார்க்கிலேயே பெரும் பாலான படத்தையும் முடித்து இருக்கின்றார்கள்…  பர்ஸ்ட் காபி பிக்சர்ஸ் டைட்டிலுக்கு பின்னனியில் வரும் இவை என்பதுகளில்  படம் ஆரம்பிக்கும் போது போடப்படும்  இசை இது…

=====

படத்தின் டிரைலர்.

 

==========

படக்குழுவினர் விபரம்

Directed by Radha Mohan
Produced by Ramjee Narasiman
Starring Nandita Swetha
Karunakaran
Music by Steeve Vatz
Cinematography Mahesh Muthuswami
Edited by T. S. Jay
Production
company
First Copy Pictures
Night Show Cinema
Distributed by Auraa Cinemas
Release dates
27 November 2015
Country India
Language Tamil

======

பைனல்னிக்…

இந்த படம் ராதாமோகனின் டிரேட்மார்க் திரைப்படம் என்றால்இது மிகையில்லை.. லைட் காமெடி அதில் சமுக கருத்துகள்  இதுதான் ராதாவின் பலம்… குடும்பத்தோடு இந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடிவிட்டு வரலாம்… செம  ஜாலியாக இருப்பதை மறுக்கமுடியவில்லை…  ஆல் த பெஸ்ட் ரராதாமோகன் டீம். குடும்பத்தோடு கண்டிப்பாக பார்த்தே தீர  வேண்டிய திரைப்படம்.. இந்த உப்புக்கருவாடு.

 

===

படத்துக்கு ரேட்டிங்..

பத்துக்கு ஏழரை…

 

=========

படத்தின்  வீடியோ விமர்சனம்..

https://youtu.be/7QRF9YWyn2M

ஜாக்கிசேகர்.

27/11/2015

 

 

 

follows on

http://www.jackiecinemas.com/

http://www.jackiesekar.com

https://www.facebook.com/JackieCinemas

https://twitter.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas