என்னுடைய குழந்தைக்கு தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களின் பெயரை தான் வைத்துள்ளேன் – இயக்குநர் பாஸ்கர் !!
அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் தயாரித்துள்ள திரைப்படம் “ ஹலோ நான் பேய் பேசுறேன்”. இவ்விழாவில் நடிகர்கள் வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா ,வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , இயக்குநர் பாஸ்கர் , தயாரிப்பாளர் சுந்தர்.சி , இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் , பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் வைபவ் பேசியது , இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் குஷ்பூ அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் என்னுடன் ஐஸ்வர்யா , ஓவியா என்று இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவரும் பேய்களாக நடித்துள்ளனர் , அதுவும் அழகான பேய்களாக நடித்துள்ளனர் என்றார் நடிகர் வைபவ்..
நடிகை ஐஸ்வர்யா பேசியது , இப்போது வாராவாரம் எக்கச்செக்க பேய் படங்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் இந்த படம் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த படத்தின் இடைவேளை பகுதியில் தான் பேய் வரும். இது ஒரு கை பேசி பேய் கதை என்று கூட சொல்லலாம். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் இடைவேளை பகுதி இயக்குனர் என்னிடம் கதை சொல்லும்போது இடைவேளை பகுதிவரை பேய் வரவேயில்லை. முதல் பாதி முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையிலும் இரண்டாம் பாதி முழுவதும் நம்மை மிரட்டும் வகையிலும் இப்படம் இருக்கும்.
நான் இந்த படத்தில் முழு எனர்ஜியுடன் ஒரு சாவு குத்து பாடல் ஒன்றில் ஆடியுள்ளேன். உங்கள் அனைவருக்கும் அது பிடிக்கும்.
நடிகை ஓவியா பேசியது…. நான் இந்த படத்தில் முதன் முதலாக பேய் வேடத்தில் நடிக்கிறேன் வைபவ் கூறியதுபோல் அழகான பேயாக வருகிறேன். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நம்மை சிரிக்க வைக்கும் படமாக இருக்கும். இந்த படத்தில் எனக்கு வாய்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சி அவர்களுக்கும், இயக்குனர் பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி கூற கடமைபட்டுள்ளேன் என்றார்.
வி.டி.வி.கணேஷ் பேசியது…. நான் பல்வேறு பேய் படங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போதுதான் முதல் முதலாக ஒரு பேய் படத்தில் நடிக்கிறேன். இது உங்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படமாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை என்றார்.
யோகி பாபு பேசியதாவது…. இதுவரை நான் எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதல் தடவையாக இசை வெளியிட்டு விழா மேடையில் ஏறி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சுந்தர்.சிஅவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
படத்தின் பாஸ்கர் இயக்குனர் பேசியதவாது , நான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படம் , திரைப்படம் இயக்கி இன்று திரைப்பட இயக்குநராக உயர்ந்துள்ளேன்.பிப்பிரவரி இருபதாம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றே சொல்லவேண்டும் , இந்த நாளில் தான் நான் இயக்குநரிடம் கதையை கூறினேன். முதல் பாதியை கேட்ட இயக்குநர் என்னை இந்த படத்தை இயக்க சொன்னார். அப்படி என்னிடம் சொன்ன பிறகு தான் இரெண்டாம் பாதியின் மீதி கதையை கேட்டார். இயக்குநர் சுந்தர் சி அவர்களிடம் கதை கூறிய பிறகு தான் என்னுடைய வாழ்க்கையே மாறியது என்று கூறலாம். என்னுடைய குழந்தைக்கு நான் என்னுடைய தயாரிப்பாளரின் பெயரை தான் வைத்துள்ளேன். என்னுடைய குழந்தைக்கு பெயர் வைத்ததும் அவர் தான் என்றார் இயக்குநர் பாஸ்கர்.
தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசியது , இயக்குநர் பாஸ்கரை எனக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் தான் தெரியும். அவர் எடுக்கும் நகைச்சுவை குறும்படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவரை வைத்து நான் படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்ததும் அவர் என்னிடம் “ திருடர்கள் ஜாக்கிரதை” என்னும் கதையை தான் கூறினார். பிறகு என்னிடம் பேய் கதை இருக்கிறது என்று அவர் கூறியதும். அந்த கதை டெவலப் செய்து வர்ற பத்து நாள் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவர் மூன்றே நாட்களில் கதை முடித்து வந்து என்னிடம் பேசினார். படம் நன்றாக வந்துள்ளது , மக்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் என்று கூறினார் தயாரிப்பாளர் சுந்தர்.சி.