சூர்யா ஜோதிகா நடிச்ச மாயாவி படத்தை இயக்கி டைரக்டாரா ஆனதுக்கு அப்புறமும் எங்க டைரக்டர் எங்க டைரக்டர் என்று மூச்சுக்கு மூன்னூறு வாட்டி சொல்ல ஒரு மனது வேண்டும்… இன்னும் புரியலையா..??
மாயாவி திரைப்படத்தை இயக்கிய சிங்கம் புலி இயக்குனர் பாலாவை எங்க டைரக்டர் எங்க டைரக்டர் என்று சொல்லவில்லை… சுத்தர் சியைதான் மூச்சிக்கு முன்னூறு தடவை எங்க டைரக்டர் எங்க டைரக்டர் என்று ஹலோ நான் பேய் பேசறேன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் அப்படி பேசினார்…
காக்கா புடிக்கத்தான் அப்படி பேசினார் என்று சொல்லிவிட முடியாது.. காரணம் காக்கா பிடிப்பவன் பேச்சும் கண்ணும் கண்டிப்பாக காட்டிக்கொடுத்து விடும்… சிங்கம் புலி பேசும் போது கண்கள் கலங்கி இருந்தன…
அவரது பேச்சு நெகிழ்ச்சியாக இருந்தது…சுந்தர் சிபடங்களில் இதுவரை தலைகாட்டாத அவரது உதவியாளர் சிங்கம்புலி ஹலோ நான் பேய் பேசறேன் திரைப்படத்தின் மூலம் சுந்தர் சி பேனரில் நடிக்கின்றார்…
ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக சிங்கம்புலி சுந்தர் சியிடம் சேரும் போது மொத்தம் பத்தொன்பது உதவி இயக்குனர்கள் இருந்தார்கள் என்றும் சுந்தர் எப்போதுமே பந்தாவை விரும்பமாட்டார்… காரணம் அவர் கஷ்டபட்டு முன்னுக்கு வந்தவர் என்று சுந்தர் சி பற்றி தெரியாத சுவாரஸ்ய தகவல்களை விழாவை கலகலப்பாக்கி பேசினார் என்றே சொல்ல வேண்டும்…
அது மட்டுமல்ல.. சுந்தர் சி இந்த தீபாவளிக்கு லட்ச ரூபாய் கவரில் போட்டு தீபாவளி செலவுக்கு வைத்துக்கொள்ள சொல்லி கொடுக்க முதல் முறையாக தன் மனைவிக்கு விலையுயர்ந்த பட்டு புடவை வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார் சிங்கம்புலி..