Jil Jung Juk movie teaser & Shoot the Kuruvi Video

ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான  பாலகுமாரன் எழுதிய டயலாக்… ஜில் ஜங் ஜக்… அதாவது பெண்களை மூன்று வகையாக பிரிக்கலாம்… என்று காமெடியன் வடிவேலு பேசுவதாக அந்த படத்தில் அந்த டயலாக் வரும்…

அந்த டயலாக்கையே படத்தின் தலைப்பாக வைத்து… புதுமுக இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்து, தயாரித்திருக்கும்  திரைப்படம்தான் ‘ஜில் ஜங் ஜக்’

 

இந்த திரைப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாவதாக சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு… காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்துக்கு பிறகு  மீண்டும் இந்த திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

 

ஜில் ஜங் ஜக் திரைப்படதின் டீசர்.

 

விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் இருக்கும் முக்கிய அம்சம்.. சித்தார்த்துக்கு ஜோடியாக யாரும் இல்லை என்பதோடு விழுந்து விழுந்து  சிரிக்கவைக்கும்  நகைச்சுவைப் படமாக உருவாகிவருகிறதாம்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது..

 

ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின்  ஷுட் த குருவி பாடல்…