Puli Movie Review | Vijay, Shruti Haasan, Hansika Motwani

Puli-First-Look

 

புலி திரை விமர்சனம்.

பாகுபலி போலா..??? என்று கேட்டால் ஆம்.. ஆது போன்று ஒரு பேன்டசி கதைதான்.. ஆனால் பாகுபலி நீண்ட கால தயாரிப்பு… புலி குறைந்தகால தயாரிப்பு… ஆனாலும் தமிழல் அரைத்த மாவையே அரைக்காமல் பேன்டசி ஜேனரில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து  கதையை யோசித்த வகையில் அதில் விஜய்  நடித்த வகையில்   இருவருக்கும் ஒரு ஸ்பெஷல் பொக்கே..
====
புலி படத்தின் கதை என்ன?
வேதாள தேசம்… மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள்… அவர்கள் கட்டுபாட்டில் 59 க்கும் மேற்ப்பட்ட   கிராமங்கள் உள்ளன.. அதில் உள்ள ஒரு ஊரில் மருதீஸ்வரன் (விஜய்) தனது அப்பா பிரபுவோடு வசிக்கின்றார்…அதே ஊரில் வசிக்கும் நரேனின் மகள் ஸ்ருதியோடு லவ்வு.. ஒரு சப யோக சுபதினத்தில் ஸ்ருதியை வேதாள தேசத்து  ஆட்கள் கடத்தி செல்கின்றார்கள்… விஜய் தன் காதலியான ஸ்ருதியை எப்படி மீட்டார் என்பதே  புலி திரைப்படத்தின் கதை…
=====
படத்தின் சுவாரஸ்யங்கள்..
 விஜய் கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கின்றார்.. ஆனால் நிறைய இடங்களில் அவர்காட்டும் ரியாக்ஷன் பண்டைய கால  பாண்டசி திரைப்படத்தை பார்க்கும் உணர்வை குறைப்பதை மறுக்க முடியாது அதே வேளையில் ஸ்ருதியை அழைத்து வருவதும் தனது கடமை என்று விஜய் சொல்லும் அந்த காட்சியில் ரசிக்க வைக்கின்றார்…
ஸ்ருதிஹாசன்  ஹாட்டாக இருக்கின்றார்… குள்ளமனிதர்கள் சாங்கில் பின்னி இருக்கின்றார். பாதி நேரம் மயக்கத்திலேயே இருப்பதால் பெரிதாய் பர்பார்ம் செய்ய அவருக்கு வாய்ப்பு இல்லை..
பின் பாதியில் வரும் ஹன்சிகா  பப்ளிமாஸ் அழகால் அசத்துகிறார்.. அவருடைய இளவரசி காஸ்ட்யூம் அவருக்கு பெரிய பலம்.. ஹன்சிகா…. ஒரு பெல்லி  டான்ஸ் ஆட டிரை செய்து இருக்கின்றார்.. நன்றாகவும் இருக்கின்றார்..
ஸ்ரீதேவி பல வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில்.. ஆனால் இன்னமும் இங்லிஷ் விங்கிலிஷ்  போல குணச்சித்திர பாத்திரங்கள் செய்தால் இன்னும் ஒரு ரவுண்ட் வரலாம்.
 நரேன்,பிரபு, தம்பி ராமய்யா, வித்யா, சத்தியன் ரோபோ சங்கர்  போன்றவர்கள் கலகலப்பு ஊட்ட முற்சிக்கிறார்கள்..
ஒளிப்பதிவு நட்டி என்றகிற நட்ராஜ்.. இன்னும்  பச்சை பசேல்  என இடங்களை தேர்வு செய்து இருக்கலாம்.. ஒளிப்பதிவில் ஒரு அவசரம் தெரிகின்றது.
மருத்துவராக  வேதாள தேசம் வரும் விஜய்… அந்த மருத்துவருக்கான எந்த  வேலையையும் அவர் இம்மியளவும் செய்யவில்லை..
சுதிப்.. நன்றாக நடித்துள்ளார்….
டிஎஸ்பி இசையில் இரண்டு பாடல்கள்  மற்றும் மிரட்டும் பின்னனி இசை அருமை.
=========
பைனல்கிக்.
வேதாளம் என்று ஏன் அஜித் திரைப்படத்துக்கு  பெயர் வைத்தார்கள் என்று இப்போது புரிகின்றது..
சமகால அரசியலையும்.. இந்த படத்தையும் இணையத்தில்  பொருத்தி பார்க்கின்றார்கள். அப்படி ஒரு பேச்சுக்கு பொருத்தி பார்த்தால்…   அரசியாரே.. நீங்க நல்லவங்கதான்.. உங்களை சுத்தி இருக்கறவங்கதான் சரியில்லை என்று சொல்லாமல் சொல்கின்றார்…
 பேன்டசி கதைகளில் லாஜிக் பார்க்க வேண்டாம்தான்.. ஆனாலும் சில இடங்களில் திரைக்கதை எதை வைக்கலாம் எதை விடுக்கலாம் என்று   யோசித்து இருப்பதுபுரிகிறது..
 இடைவேளைக்கு முன் இருந்த கிரிப்னஸ்… இடைவேளைக்கு பின்பாதியில் கொஞ்சம் லேக் என்பதை மறுக்க முடியாது…
இருப்பினும்.. இந்த படத்தை குழந்தைகள் ரொம்பவே ரசிப்பார்கள்…பேன்டசி கதை என்று படத்தை படமாக பார்ப்பவர்கள் நிச்சயம்  இந்த படம் ஏமாற்றது.. பேன்டசி கதை புரியாதவர்களுக்கு  இந்த படம் மொக்கை என்று கண்டிப்பாக  சொல்லுவார்கள்..
சுறா அளவுக்கு இந்த திரைப்படம் மோசம் இல்லை என்று  சொல்லலாம்… கண்டிப்பாக டைம்பாஸ் மூவி..
=========
புலி வீடியோ விமர்சனம்.

 

Previous articlehappy birthday sivaji ganesan ji
Next articleMemories of Murder (2003) South korea | உலகசினிமா |கொலைகளின் நினைவுகள் |